Thursday, November 08, 2007

தீபாவளி ஒழித்த நாட்கள்

தீபாவளிச் சிறப்புப் சிறுகதை.

அவர் இறந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. பலப்பல ஆண்டுகள் ஆகியிருக்க வெண்டும். ஓர் ஏற்பாட்டினால் பூமியில் அவர் வாழ்ந்த இடத்துக்கு வந்தார். அவரை வரவேற்றவர் சொன்னார்,

--- இந்தப் பூமிச்சுற்றுலாவில் நான்தான் உங்களுக்கு வழிகாட்டி.
--- நீங்கள்?
--- ஏற்பாட்டின் ஒரு பகுதி.
--- இன்றுதானே தீபாவளி? தீபாவளி அன்றுதான் வரவேண்டுமென்று விரும்பியிருந்தேன்.
--- இன்று நவம்பர் மாத அமாவாசை. இன்றுதான் முந்நாட்களில் தீபாவளி கொண்டாடுவார்கள்.
--- இங்கு தீபாவளி இல்லயா? இது இந்தியாதானே?
--- நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்கள். ஆட்சி மாற்றத்தில் தீபாவளியை ஒழித்து விட்டார்கள்.
--- எப்படி? எப்படி சாத்தியம்?
--- முதலில் விடுமுறை நிறுத்தப்பட்டது.
--- அரசு விடுமுறைதானே?
--- எல்லாமே அரசுதானே!
--- ஓ!
--- இப்போது பல விஷயங்கள் புரிந்ததா?
--- உடனே நான் இந்த உலாவை இப்போதே முடிக்கவேண்டும்.
--- மனதில் விண்ணப்பியுங்கள். உலா முடிவு சற்று நேரத்தில் வந்துவிடும். வரும்வரை நான் உங்களுடன் இருப்பேன்.

--- தீபாவளி மட்டுமா நிறுத்தப்பட்டது?
--- எல்லா பண்டிகைகளும், கோயில் உற்சவங்களும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களும்.
--- கிருத்துமஸ், ரம்ஜான் இவை எப்படி?
--- எதிர்ப்புகளுக்குப் பிறகு கிருத்துமஸ் நிறுத்தப்பட்டது. கடைசியாக ரம்ஜான் நிறுத்தப்பட்டது.
--- எதிர்ப்பு சாத்தியமா?
--- வெளிப்படுவது சாத்தியமில்லை. உயர்மட்டங்களில் வெளிப்பட்டபோது இவை நிறுத்தப்பட்டன.
--- உயர்மட்டம்?
--- வெளிநாடுகளுச் சென்றால் முழுமையாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.
--- பொங்கல்?
--- அது அரசு விழா.
--- வேறு விழாக்கள்?
--- தலைவர்களுடைய பிறந்த நாட்கள். அதாவது....
--- என்னால் ஊகிக்க முடிகிறது. நாடு எப்படி இருக்கிறது?
--- எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது.
--- வேறு ஏதாவது?
--- எல்லோருக்கும் உணவு கிடைக்கிறது.
--- பட்டினிச்சாவெல்லாம் இல்லை என்கிறீர்கள்?
--- அப்படி இல்லல. இப்போது அது தண்டனைக்குறிய தற்கொலை முயற்சிகளில் ஒன்று. அம்முயற்சியில் பிழைத்தால் ஆயுள் தண்டனை. இறந்தால் இறந்தவருக்கு அன்மையான சுற்றத்திலோ நட்பிலோ இச்சாவைத் தடுத்திருக்கும் சாத்தியம் மிக அதிகமாக உள்ளவர் என்று அரசு கருதுபவருக்கு ஆயுள் தண்டனை.

இது நல்ல வேளை. அவர் மனதால் விரும்பிய உலா முடிவு அவருக்கு வந்துவிட்டது.

************************************
கொய்மோருடன் அம்மா சொன்னாள்,

இணைய உலாவில் இடததின் பக்கம்
நினைத்திடல் என்றும் தவிர்.

***********************************************