Wednesday, April 26, 2006

தமிழ் வணக்கம்

தமிழை மகிழ்ந்து வணங்குகிறேன்
தலையை நிமிர்த்தி வணங்குகிறேன்
சிமிழைத் திறந்து குங்குமத்தைச்
சிரசில் நுதலில் அவளிடுவாள்
கமழும் மணமாய் அறிவதனைக்
கவனம் தெரிந்த நாள்முதலாய்
அமுதாய் என்னுள் புகட்டிவரும்
அருமைத் தமிழை வணங்குகிறேன்.

5 Comments:

At April 27, 2006 6:55 AM, Blogger Maraboor J Chandrasekaran said...

miga sirappaaga uzzadhu, seekiramthamizmaNattil edhirpaarkireyn

 
At September 27, 2009 7:48 AM, Blogger KAVIYOGI VEDHAM said...

கமழும் மணமாய்.. என்றிருக்க வேண்டுமோ..? பாடல் நன்று..ரசித்தேன்.
யோகியார்

 
At September 27, 2009 7:52 AM, Blogger KAVIYOGI VEDHAM said...

குங்குமத்தை..ச். ஒற்று வரணும்,
யோகியார்

 
At September 27, 2009 7:53 AM, Blogger KAVIYOGI VEDHAM said...

அறிவதனை..க்.. ஒற்று வரும்..
பிழையின்றி நாம் எழுதினால்தானே நமைப்பின்பற்றும் வாலிபரும் தவறின்றி எழுதுவர்?
யோகியார்

 
At September 27, 2009 9:46 AM, Blogger ஓகை said...

யோகியாருக்கு நன்றி. திருத்தங்களைச் செய்துவிட்டேன்.

 

Post a Comment

<< Home