தலைகொண்டான் தாலிபன்
தலைகொண்டான் தாலிபன்
========================
வன்சோகம் உலகில் வழிந்தோட ஊழாய்
என்சோ தரனின் தலைதனைக் கொண்டோய்
உமக்கும் உலகுக் குமிடையில் உண்மை
சுமந்து யாரும் சொல்பவர் இலையோ?
நும்சோ தரனின் தலைதனைக் கொண்டோம்
எம்மைக் கண்டிக் கநீர்தான் யாவிர்?
உம்மைத் தண்டிக் கவேயாம் உயிர்த்துளோம்
சிந்தைக் குமெமக்கும் கிஞ்சித்தும் தொடர்பிலை.
நிந்திக்கும் உலகை வெகுதூரம் விரட்டுவோம்
எந்த இனத்துடன் எமைநீர் சேர்த்தீர்.
எதற்கும் இணங்கா எம்மினம், ஈனம்.
வாட்டும் வயிற்றுப் பசிக்காய் கொல்லும்
காட்டு மிராண்டிகள் எம்மின மில்லை
கொல்லும் உணர்வுக் காய்கொல் பவர்யாம்
சொல்லா தீர்யாம் அவரினும் இழிந்தோர்.
துளிர்க்கத் துளிர்க்க வெட்டுவீர் எம்மை
வெளிறும் முகம்கொள வைப்போ மும்மை
அடிவரை அகழ்வீர் பொசுக்குவீர், உலகம்
துடியாய்த் துடிக்க துய்ப்போம் வெற்றி
ஓட ஓட உலகெல் லைவரைப்
பாடாய்ப் படுத்தி துரத்துவீர்
மீண்டும் துளிர்ப்போம் துளிர்க்கயில் எமக்கு
வேண்டும் ஒருபலி, வெட்டித் துளிர்ப்போம்.
என்னதான் உம்பதில்? உலகின் உறுபதில்?
எந்த பதிலிலும் எமக்கிலை சம்மதம்.
என்னதான் செய்யும் எளியயிவ் வுலகம்?
இவர்க்கும் உலகுக்கும் மிடையில் இருப்போர்
எவரெவர்? என்னதான் செய்கிறார்?
எதற்கிந்த மௌனம்? உலகம்
பதறப் பதிலும் பாரா முகமே!
4 Comments:
இரங்கற்பா படிய பாவலரே
பாராட்டுகள் பல தங்களுக்கு
பாவியந்த தலிபான் தலைதனை யார்
எடுப்பது ஊர் எடுக்கமா உலகம்தான் எடுக்குமா?
விதி எடுக்குமா வேதந்தான் எடுக்குமா
கொடுஞ்செயல் செய்த கொடுமைகாரனை
ஓகை ஐயா
கவிதை மிக அருமையாக உள்ளது.இந்த தலைப்பு எப்படி எனக்கு தோன்றியது என்றும் விளங்குகிறது.தமிழ்மணம் முகப்பில் இதை பார்த்திருபேன். அது என் மனதில் தங்கியிருந்திருக்கிறது என நினைக்கிறேன்.
அன்புடன்
செல்வன்
ஓகை ஐயா
கவிதை மிக அருமையாக உள்ளது.இந்த தலைப்பு எப்படி எனக்கு தோன்றியது என்றும் விளங்குகிறது.தமிழ்மணம் முகப்பில் இதை பார்த்திருபேன். அது என் மனதில் தங்கியிருந்திருக்கிறது என நினைக்கிறேன்.
அன்புடன்
செல்வன்
செல்வன், வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home