Tuesday, August 22, 2006

மைலாப்பூர் உறவுகள்

22-08-2006 சென்னை தினத்தில், நான் சென்னைக்கு வந்து முதன்முதலில் குடியேறி பல ஆண்டுகள் வசித்த மயிலாப்பூர் பற்றி ஒரு கானா இயற்றி உங்களுக்கெல்லாம் சமர்ப்பிக்கிறேன். இதில் சொல்லியிருக்கும் அத்தனை வழிபாடு இடங்களும் நான் கூறிய வரிசையிலேயே மைலப்பூரில் அமைந்திருக்கின்றன.




மைலாப்பூர் உறவுகள் (கானா)
========================

-என்னா கஜா இன்னிக்கு ரொம்ப குஷியா இருக்கிற?

______ கஜாவுக்கு கண்ணாலம் வச்சிகிணேன் - என்
______ மைலாப்பூரு உறவுக்கெல்லாம் சொல்லிகிணேன்

______ (கஜாவுக்கு.........)

-உனக்கு ஏதுப்பா உறவெல்லாம். நீ தனிக்கட்டை ஆச்சே?

______ இன்னா சாமி அப்டி கேட்டே - இந்த
______ மைலாப்பூரே நம்ம பேட்ட
______ நெறயா ஒறவுக்காறங்க கீறாங்க
______ சுகுரா அத்தினிபேரும் வாராங்க!

-சரி வரிசையா சொல்லு பார்க்கலாம்! யார் யாரயெல்லாம் கூப்பிட்டே?

______ என்வூடு சித்திரக்கொளம் பக்கந்தான்
______ மொத ஒறவக் கூப்பிட போனேன் மேக்கதான்
______ தேங்கூரு செல்வ வினாயகன கூப்பிட்டேன்
______ கூடவே குந்திகிற வெள்ளீஸ்வரன கூப்பிட்டேன்
______ தெக்க வந்து மசூதில அல்லாவை கூப்பிட்டேன்
______ ______ ______ ______ நம்ம அல்லாவை கூப்பிட்டேன்
______ அப்பால மேக்கபோயி தண்டுமாரிய கூப்பிட்டேன்

______ (கஜாவுக்கு.........)

-ம், அப்பறம்

______ வடக்க போனா வந்துது நம்ம மடம்
______ ராமகிஸ்ண பரமஅம்சர் கீற எடம்!
______ அத்த தாண்டி வடக்கால சாயி கோயில் வருதுங்கோ
______ அப்பால கொஞ்சம் போனா நவசக்தி புள்ளாருங்கோ!
______ அவரையும் கூப்டுகினு அப்பால போனேங்கோ
______ அம்சமா வந்தாருங்கோ ஆஞ்சநேய சாமிங்கோ!
______ அம்சமா வந்தாருங்கோ ஆஞ்சநேய சாமிங்கோ!!

______ (கஜாவுக்கு.........)

-ஏ அப்பாடி, பெரிய பட்டியலா வச்சிரிக்கியே!

______ அய்யன் திருவள்ளுவரு அங்கே நின்னாரு
______ ______ ______ சிலையா அங்க நின்னாரு
______ அவருக்கு சலாமு அய்யா சொன்னாரு
______ ______ ______ இந்த அய்யா சொன்னாரு

______ அப்பாலே கிழக்காலே முண்டகன்னி அம்மன கூப்பிட்டேன்
______ அய்யன் திருவள்ளுவர அவரோட கோயில்ல கூப்பிட்டேன்
______ அதுக்கு பக்கத்துல மாதவப் பெருமாள கூப்பிட்டேன்
______ இன்னும் கொஞ்சம் கிழக்காலே கோலவிழியம்மன கூப்பிட்டேன்
______ இன்னும் நாலு எட்டு வச்சி காரணி ஈசனயும் கூப்பிட்டேன்

______ (கஜாவுக்கு.........)

-மூனு பக்கம் சுத்தி வந்திருக்கிற. இப்ப தெக்க திரும்ப போற! சரியா?

-கரீட் சாமி.

______ தெக்கால வந்தாக்கா நெடுநெடுன்னு நிக்கிதுங்கோ
______ கடக்கர காத்து வாங்கும் தோமையர் சர்ச்சுங்கோ
______ அவரையும் கூப்பிட்டேன் வாரேன்னு சொன்னாருங்கோ
______ என் வூட்டு பக்கத்துல கேசவப் பெருமாளுங்கோ
______ அவரையும் கூப்பிட்டேன் அவரு நம்ம ஆளுங்கோ
______ அல்லாரையும் கூப்டுகிணு நடுவுக்கு வந்தேங்கோ
______ ______ ______ ஊரு நடுவுக்கு வந்தேனுங்கோ
______ இஷ்ட தெய்வம் கபாலி கோயிலுக்கு வந்தேங்கோ
______ என்னோட
______ இஷ்டதெய்வம் கபாலி கோயிலுக்கு வந்தேங்கோ

______ (கஜாவுக்கு.........)

-அடி சக்க, கடைசியா கபாலியப் பாக்கிற.

______ உள்ள போயிக் கூப்பிட்டேன் மயிலேறும் முருகனத்தான்
______ வற்புருத்தி கூப்பிட்டேன் கற்பக வல்லி அம்மாவத்தான்
______ வெள்ளமாக அருள்புரியும் வெள்ளிமலை காபாலியத்தான்
______ மருடி மருடி கூப்பிட்டேன் கட்டாயமா வந்திடத்தான்
______ அறுபத்து மூனூபேரு நாயன்மாரு சாமிங்கோ
______ அவங்களையும் கூப்பிட்டேன் வருவாங்கோ பாருங்கோ
______ மத்த எல்லா சாமிங்களும் நவக்கிரக சாமிங்களும்
______ அல்லாரையும் கூப்பிட்டேன் அவங்களும் வருவாங்கோ

______ (கஜாவுக்கு.........)

-இன்னும் ஏதாவது சாமிங்க பாக்கி கீக்கி இருக்கா?

-இல்லாம...

______ மசூதி தெருவுல ஒரு விசேஷ இடமுங்கோ
______ மசூதி தெருவுல ஒரு விசேஷ இடமுங்கோ
______ அதுங்கோ பேயாழ்வார் அவதார தலமுங்கோ
______ ஆழ்வாருங்க மொத்தம் பத்து பேருங்கோ
______ ஆண்டாளும் இன்னுமொரு ஆழ்வாரு தானுங்கோ

-உறவுக்காறங்கன்னு சொல்லி சாமிங்களெல்லாம் கூப்பிட்ற..என்ன நியாமப்பா இது?

______ அல்லாருக்கும் பெரியவரா ஒரு பெரியாழ்வார் பாருங்கோ
______ அவரு இன்னா சொன்னார் கேளுங்கோ
______ அவரு இன்னா சொன்னார் கேளுங்கோ

-சாமிங்கெல்லாம் உனக்கு உறவுங்கன்னாரா?

______ ஆமாங்கோ, ஆமாங்கோ அப்படித்தான் சொன்னாருங்கோ!
______ ______ ______ ______ அப்படித்தான் சொன்னாருங்கோ!!

______ ஊரிலே ஒத்தகாணி நெலம் இல்லேன்னு சொன்னாரு!
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!
______ சாமியத்தவிர
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!
______ உறவு மத்தபடிக்கு ஒருத்தர் இல்லேன்னு சொன்னாரு!!

______ உறவு மத்தபடிக்கு
______ ______ ______ ஒருத்தர் இல்லேன்னு
______ ______ ______ ______ ______ சொன்னாரு...!!!



______ *************______ *************______ *************

8 Comments:

At August 22, 2006 9:11 PM, Blogger அபுல் கலாம் ஆசாத் said...

நடராஜன் அய்யா,

கருத்து நன்றாக வந்திருக்கிறது.

கானாவின் அமைப்பிற்கு அங்கே இங்கே கொஞ்சம் தட்டவேண்டும். நாளை மாலை மீண்டும் வருவேன்.

அன்புடன்
ஆசாத்

 
At August 23, 2006 2:10 PM, Blogger VSK said...

அட இன்னாபா! கஜா! நல்லா கீறியா! இன்னா நம்ம கைய்ல நீ சொல்லிக்காம பூட்டே! ஒரு ஆவத்து அவசரம்னா ஓடி வர்றவந்தானேப்பா நானு! கண்ணாலம் வெச்சுக்கினியாக்கும்! ஏதோ நீ நம்ம டாக்டர் புள்ளயாண்டான்ட்ட வந்து சொன்னாங்காட்டியும் நமக்கு நூஸ் தெரிஞ்சுது! இல்லேன்னா மட்டும் என்னா? இந்த மன்னாருக்குத் தெர்யாமப் போயிருமா இன்னா?

ம்ஹூம்! கானா பாட்டெல்லாம் படா மஜாவா போட்ருக்கே? நடத்துபா, நடத்து! நல்லா இருந்தா சரி! பாட்டுல வர்ற எடம்லாம் சரிதான்! இன்னா கொஞ்சம் படிக்கசொல்ல முட்டுது; இடிக்குது! சரி பண்னிருவோமா? இன்னா சொல்ற! இன்னாமோ உறவு, உறவுன்னு எளுதியிருக்கியே, அத்தான்பா பிரியல நம்க்கு! ஓ! ஒறவா! அத்தையா அப்டிப் போட்ருக்கே? இன்னாமோ போ! நம்மளைத்தவுர அல்லாரும் எலக்கணமா பேசக் கத்துக்கிட்டீங்கோ!


சரி! எங்கனே வெச்ச்சுருக்க கண்ணாலம்? சொல்லேன்னாலும் நம்ம ஆளுங்க அத்தினி பேரும் உசாரா அங்கன ஆஜர் ஆயிற மாட்டோம்! நீ கண்டுக்காங்காட்டி நாங்கல்லாம் வுட்ருவோமாக்கும்! இன்ன நா சொல்றது? சரி வர்ட்டா!

 
At March 27, 2008 9:38 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர் கானா ஓகை ஐயா!
அத்தினி பேரையும் லிஸ்ட்டு போட்டு ஒரு கலக்கு கலக்கிட்டீங்க!
ராகம்: கானா: தாளம்:ஓகை
:-))))

சரி கண்ணாலப் பத்திரிக்கை ஓக்கே! இத்தினி சாமியும் வந்து மொய் வைக்குமே! ஒரு பெரிய வசூல்-ன்னு சொல்லுங்க!:-)

எனக்குப் பிடிச்ச இடம் நீங்க அறுவத்து மூனு நாயன்மாரையும் பேயாழ்வாரையும் கூப்பிட்டது தான்! பந்தியில் இவிங்கள ஸ்பெசலா கவனிச்சி அனுப்புங்க! :-)

- krs from Nageswara Rao Park, Tirumayilai.

 
At March 27, 2008 11:10 AM, Blogger ஓகை said...

2006ம் ஆண்டு பின்னூட்டம் போட்ட நண்பர்கள் ஆசாத் மற்றும் VSK (அப்ப SK ஆக மட்டுமே இருந்தார். அவரை ஆக்கிய VSK புன்னியவானும் நான்தான்) இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நம்ம சுருசுருப்பு யாருக்கு வரும்? யாருக்கும் வரவேணாம்.

 
At March 27, 2008 11:18 AM, Blogger ஓகை said...

KRS, வந்ததுக்கு மிகவும் நன்றி. இது உங்களுக்கு பிடிக்கும் என்று நான் யூகித்தேன்.

சென்னையில் மைலாப்பூர் அவ்வளவு சிறப்பான இடம்.

மைலாப்பூர் என்று எழுதாம்ல் திருமயிலை என்று எழுதியதைக் கவனித்தேன். வாழ்க!

 
At March 28, 2008 1:55 AM, Blogger  வல்லிசிம்ஹன் said...

உண்மையாவே எல்லாக் கோவிலகளையும் சுற்ற வைத்துவிட்டீர்கள்.
எங்கள் மைலாப்பூர் என்று என்றும் புகழ் பாடலாம்:)
எஸ்கே சாருக்கு நீங்கதான் விஎஸ்கே என்று பெயர் வைத்தீர்களா!!!
ரேவதிநரசிம்ஹன் நாகேஸ்வரராவ் பூங்கா.

 
At March 28, 2008 12:46 PM, Blogger ஓகை said...

வல்லியம்மா, வருகைக்கு நன்றி.

இன்னொரு sk என்ற பதிவரை நான் இவரென்று நினைத்து சற்று உரிமையோடு எழுதப்போக, வந்த குழப்பத்தில் தம் பெயரை VSK என்று மாற்றிக் கொண்டார்.

 
At March 29, 2008 4:13 AM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அப்படியே வடக்கே போனா வாலீஸ்வாரர்,அப்பர்சாமி,, கச்சபேஸ்வரர்,மல்லீஸ்வரர் இருக்காங்களேஅவுங்கள ஏன் கூப்பிடலை?

 

Post a Comment

<< Home