Saturday, June 10, 2006

வலைப்பூவின் விவரங்கள்

வலைப்பதிவர் பெயர்:
........நடராஜன் ஸ்ரீநிவாசன்

வலைப்பூ பெயர் :

........ஓகை

சுட்டி(url) :
........http://oagaisblog.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)


ஊர்:
........சென்னை

நாடு:
........இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
........இணையத்தில் மேய்ந்த போது வா வா என்றழைத்த வலைப்பூ உலகம்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
........13 பிப்ரவரி 2006

இது எத்தனையாவது பதிவு:
........12

இப்பதிவின் சுட்டி(url):
........http://oagaisblog.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

........அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அறிவை மேம்படுத்தவும்.

சந்தித்த அனுபவங்கள்:
........புதியன பல.

பெற்ற நண்பர்கள்:
........இனி நிறைய பெறவேண்டும்.

கற்றவை:
........கொஞ்சம். ஆனால் கற்பதற்கு இங்கு இருப்பவையோ ஏராளம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
........முழுமையாக இல்லையோ என்ற ஐயம் இருக்கிறது.

இனி செய்ய நினைப்பவை:
........ நான் பெற்ற அனுபவங்களைப் பகிர்தலும், தமிழின் பயன்பாட்டை பொது வாழ்வில் மேம்படுத்துவதற்கு ஏதாவது செய்ய முயற்சிப்பதும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
........கும்பகோணத்தில் பிறப்பு, கோவையில் பொறியியல் படிப்பு, சென்னையில் தொழிலும் வாழ்வும்.

........என்விவரம் கேட்பீர் அன்பீர்
...........என்வயது நாற்பத் தெட்டாம்
........நன்வசிப்பு சென்னை நல்லூர்
...........நாடுவது தமிழில் எல்லாம்
........என்னவளும் மகளிர் மக்கள்
...........இருவருமாய் இனிய இல்லம்
........இன்னுமொரு விவரம் கேட்டால்

...........இயம்புதற்கும் பெரிதாய் இல்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
........தமிழ் வலைப்பூ உலகம் மிக இனியதாய் இருக்கிறது. சிலர் அதைக் கடிதாக்குகிறார்கள். உணவில் சிறு கல் போல் வந்தால் கூடப் பரவாயில்லை. முறுக்கில் கல் போல் வந்து சில நேரம் முழுச்சுவையையும் கெடுக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ் வலைப்பூ உலகம் மிக உன்னத நிலை பெறப் போகிறது.

2 Comments:

At June 10, 2006 7:40 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

//இதையெல்லாம் மீறி தமிழ் வலைப்பூ உலகம் மிக உன்னத நிலை பெறப் போகிறது.//

நீங்களெல்லாம் வந்து தமிழ் தரும்போது அந்நிலை வரத்தான் போகிறது. வாழ்த்துக்கள் ஐயா.

 
At June 10, 2006 9:20 AM, Blogger ஓகை said...

//நீங்களெல்லாம் வந்து தமிழ் தரும்போது அந்நிலை வரத்தான் போகிறது. வாழ்த்துக்கள் ஐயா//

இலவச கிண்டல்?!

கொத்தனாரே நன்றி.

 

Post a Comment

<< Home