Tuesday, November 07, 2006

திரு காளிமுத்து அவர்கள் மரணம்.

நல்ல தமிழில் சிறந்த பேச்சாளர். இந்த ஒரு காரணத்துக்காக எனக்கு பிடித்த மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

5 Comments:

At November 08, 2006 12:36 AM, Blogger திருப்பூரான் said...

நல்லவர்..பண்பாளர்..எதிர் முகாமில் இருந்த போதும்..

 
At November 08, 2006 1:40 AM, Anonymous Anonymous said...

he is the only man in adamk party know about anna, kalainger and mgr.

 
At November 12, 2006 11:14 AM, Blogger BadNewsIndia said...

you too?

ஓகை, வந்தியத்தேவனின் பதிவில் நீங்க போய் ஒரு மறு பின்னூட்டம் போடணும்னு கேட்டுக் கொள்கிறேன்.

//
இது ரொம்ப தவறான செயல் வந்தியத்தேவன்!!

பதிவர் பல முகங்கள் கொண்டு எழுதுவது அவர் முழு உரிமை.

ஆளாளுக்கு எல்லார் புராணமும் அவுத்து விட்டுட்டிருந்தா ஒரு ஆரோக்கிய சூழல் காணாம போய்டும்.

பார்டெண்டர் அசிங்கமா எழுதறார்னா அந்த பக்கம் யாரும் போகாதீங்க. மஞ்சப் பதிரிக்கை படிக்கறவனும் இருக்கானே.. அவன் படிச்சுட்டு போகட்டும்.

IP address ஒண்ணா இருக்குன்றதுக்காக அவர்தான் இவர் என்றெல்லாம் சொல்வது ஓவர் (உண்மையாகவே இருந்தாலும் கூட). Hacking சாதாரணமா செய்றவங்க ஏன் poli IP உங்களுக்கு அனுப்ப முடியாதா என்ன?
அல்லது, நீங்கள் சொல்லும் மூவரும் ஒரே லைப்ரரியோ, kiosk போன்ற பொது தளங்களை உபயோகிப்பவராக இருக்கலாம்.

இந்த வேலையெல்லாம் ஆதரித்து சூப்பர், ஆஹா ன்னெல்லம் பின்னூட்டம் இட்டவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

தப்பு யார் செஞ்சாலும் தப்புதான்.

தயவு செய்து இந்த பதிவை எடுத்து விடுங்கள் சார்!

நன்றி!
//

 
At November 14, 2006 7:18 PM, Blogger ஓகை said...

BNI,

உங்களை இந்தப் பெயரில் அழைக்கவும் என் மனம் கூசுகிறது.

வலையுலகினைப் பற்றிய உங்கள் அக்கறைக்கு மிக நன்றி.

அந்தப் பதிவில் என் அதர்ச்சியையும் தகவலுக்கு நன்றியும் தெரிவித்து பின்னூட்டம் இட்டிருந்தேன். இரண்டாவது பின்னூட்டம் குழலியின் தவறான தகவலுக்கு எனக்கு தெரிந்த உண்மையை சொல்வதற்காக போடப்பட்டது. இவற்றில் உங்களுடைய ஆட்சேபம் அந்த நன்றி என்ற சொல்லுக்காக மட்டும்தான் இருக்க முடியும். என் நிலைப்பட்டை விளக்குகிறேன்.

தான் யார் என்று தெரியாமல் பின்னூட்டுவதும் பதிவுகள் எழுதுவதும் இணையம் தந்த வசதிகள். இதை சரியாக பயன்படுத்துகிறவர்கள் பலர். உதாரணமாக பதிவுக்கு இட்லிவடையைச் சொல்லலாம். பின்னூட்டத்திற்கு பல அனானி நண்பர்களைச் சொல்லலாம். ஆனால் தவறாக உபயோகப்படுத்தும் போலி போன்றவர்களைப் பொருத்து என்ன செய்யலாம்? இன்றைய சூழலில் என்ன செய்ய முடியும்?

பார் டெண்டரை இந்த வகையில் சேர்க்கலாமா என்பது ஒரு கேள்வியாக வரலாம். என்னைப் பொருத்தவரை ஆம் என்பதே நிலைப்பாடு. அவர் அசிங்கமாக எழுதுவதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. கவலையும் இல்லை. ஆனால் வலைப் பதிவர்களைப்பற்றி அவரது விமர்சன மொழி எனக்கு உடன்பாடானதாக இல்லை.

பூங்காவைப் பற்றிய என் பதிவுக்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்திருப்பீர்கள். எனக்கு ஆதரவாக வந்த சில அனானி பின்னூட்டங்களைத் தவிர அனைத்தையும் வெளியிட்டிருக்கிறேன். ஆனால் இது பற்றி பார் டெண்டரின் பதிவில் ' ஊகை ஊளையிட்ட பிறகு' என்று எழுதியிருக்கிறார். இது போன்ற மொழி எனக்கு உடன் பாடில்லை.

அமைதியாக தமிழில் மார்க்கெட்டிங் என்று மிக அழகாக பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கும் திரு மீனாகஸ் என்பவரின் உருவத்தை எள்ளி நகையாடி இருந்தார் பார் டெண்டெர். மீனாக்ஸ் தமிழ் வலையுலகிற்கும் தமிழ் மக்களுக்கும் செய்வது அருந்தொண்டாகும்.

வந்தியத் தேவனின் இந்த செயலில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. இப்படி அவதூறு பதிவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவது வலையுலகிற்கு நீண்ட கால நன்மையே பயக்கும் என்ற வகையில் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.

தமிழ்சசி அவர்களின் பதிவிலும் இது குறித்து பின்னூட்டமிட்டிருக்கிறேன்.

வந்தியத் தேவன் தவறான தகவலை அளித்து வலையுலகை திசை திருப்ப முயன்றானால் அது மன்னிக்க முடியாத குற்றம். இது சரியாக நிரூபிக்கப் பட்டால் என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்வேன்.
அங்கு பின்னூட்டமிட்டதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்பேன். அதுவரை பொருத்திருங்கள்.

நன்றி.

 
At November 17, 2006 5:51 PM, Blogger ENNAR said...

காளிமுத்துவை ஒரு காலத்தில் எனக்குப்பிடிக்காது காங்கிரஸை அதிகமாக திட்டியவர் 'கருவாடு மீனாகாது கறந்த பால் மடிபுகாது' என தங்கபாலுவும் இவரும் லாவணிபாடியவர்கள் பிறகு அவரது தமிழ் வளத்தால் என்னைக் கவர்ந்தார். இவரது இறப்பு ஈடு செய்யமுடியாததுதான் கடைசியில் ஒரு கதை எழுதுவதாகக் கேள்விப்பட்டேன் முடித்தாரா? இல்லையா? எனத் தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இறங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home