"பா"
மரபுக் கவிதை ஆர்வலர்களே,
கவிதை ஆர்வலர்களே!
'பா' என்ற புதிய பதிவை மரபுக் கவிதைகளுக்கென ஆரம்பிதிருக்கிறேன்.
வாருங்கள், உங்கள் கருத்துகளைத் தாருங்கள்.
மரபுக் கவிதைகளை விரும்புகிறவர்களை
வற்புறுத்தி அழைக்கிறேன்.
மற்றவர்கள் அனைவரையும் விரும்பி அழைக்கிறேன்.
சுட்டி.
13 Comments:
அருமையான முயற்சி பாராட்டுக்கள்.
யாப்பருங்கலக்காரிகை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
http://www.infitt.org/pmadurai/mp055.html#intro
http://www.infitt.org/pmadurai/mp055.html#uruppiyal
http://www.infitt.org/pmadurai/mp055.html#ceyyuliyal
http://www.infitt.org/pmadurai/mp055.html#ozipiyal
அருமையான முயற்சி பாராட்டுக்கள்.
யாப்பருங்கலக்காரிகை மிகவும் உதவி புரியும்.
http://www.infitt.org/pmadurai/mp055.html#intro
http://www.infitt.org/pmadurai/mp055.html#uruppiyal
http://www.infitt.org/pmadurai/mp055.html#ceyyuliyal
http://www.infitt.org/pmadurai/mp055.html#ozipiyal
ஐயா,
மரபு கவிதைகள் என்பதால் என் போன்று அறிந்து கொள்ள ஆவலாய் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு கவிதையும் எந்த வகை எனவும் அதற்கான இலக்கணங்களையும் சொன்னால் உதவியாய் இருக்குமே.
நன்முயற்சி வரவேற்கிறேன் வாழ்த்துகள்
உங்கள் கவிதைகள் அருமை.
மரபுக் கவிதைகளின் இலக்கணம் பற்றி அறிய விரும்புகிறேன்.
நானும் கூட சில கிறுக்குவது உண்டு..
அவற்றை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று தெரியவில்லையே...
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இலக்கியா, நன்றி
என்னார்,
இளங்கோவன் ஐயா,
நன்றி.
இஅலவச கொத்தனார்,
சிவாஜி,
இலக்கணம் தொடர்பான ச்ய்திகளைக் கொடுக்கவேண்டுமென்பதும் என் நோக்கங்களில் ஒன்று.
முதலில் இருக்கும் கலைமகள் வாழ்த்தும் கடைசியாகப் பதிந்த 'வண்ணத்தி" என்ற பாடலும் ஆசிரியப்ப்பாக்கள்.
ஆசிரியப்பா அருமை நடராஜன்! அடுத்து வஞ்சித்துறை பாடுங்களேன்
என் சிறு முயற்சிஇது....
பண்ணிய பாவம்போம்
நண்ணிடும் நன்மைகள்
அண்ணல் அரங்கனை
எண்ணுக என்றுமே!
(வஞ்சித்துறை)
அன்புடன்
ஷைலஜா
என்னவென்று சொல்லியிதை
எப்படித்தான் போற்றுவது
நண்ணிடும் நுமது முயற்சி
நாநிலத்தில் சிறந்திடவே !
இது என்ன பாவோ தெரியாது!
நம்க்குத் தொழில் கிறுக்கல் !
ஷைலஜா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வஞ்சித்துறையில் பாட்டெழுதி அதை தனிப் பதிவாக போடுகிறேன்.
அதில் உங்களுடைய இந்த பாட்டையும் சேர்த்து விடுகிறேன்.
எஸ்கே ஐயா,
பாராட்டுக்கு நன்றி.
நீங்களெல்லாம் கொஞ்சம் முய்ன்றால் அருமையாக மரபில் எழுதுவீர்கள்.
Post a Comment
<< Home