Thursday, October 05, 2006

ஒரு ஜெர்மானியர் சொன்னது.

ஜெர்மனியில் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி பற்றி செய்தி இன்று இந்து பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் விரிவாக வந்திருந்தது. அதன் சுட்டி.

ஜெர்மனியின் வெளிநாட்டுத்துறை அமைச்சர், ஒரு பில்லியன் (நூறு கோடி) மக்களுக்கு மேல் மக்கள்தொகை, 400க்கு மேற்பட்ட வட்டார மொழிகள், 20 தேசிய மொழிகள் இவற்றைக் குறிப்பிட்டதுடன் மற்றொன்றைக் குறிப்பிடுகிறார். ஒரு சீக்கியரை பிரதமராகவும் ஒரு முஸ்லீமை குடியரசு தலைவராகவும் மிகப் பெரிய அரசியல் கட்சி ஒரு கிருஸ்துவ பெண்மணியைத் தலைவராகவும் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கட்டுவதற்கு இந்தியாவை முன்னுதாரணமாக வைத்தே வலிமையையும் தெம்பையும் பெறமுடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த புத்தகக் கண்காட்சி நமது வலப்பதிவாளர்களின் கவனத்தை ஏன் கவரவில்லை என்று தெரியவில்லை. விவரமான பதிவுகளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.

இதையும் பாருங்கள்.

9 Comments:

At October 05, 2006 1:32 PM, Anonymous Anonymous said...

India is a semi democratic Country.
Nerhu family decide Political leadership. If Ragul gandhi married a Chiness, Chiness can become a PM in India.

Germany is a democratic Country.
German voters decide German's President.

Bitte verstehen oder nicht schreiben BLA, BLA. Deine Leute sind Feige.

 
At October 05, 2006 2:18 PM, Anonymous Anonymous said...

கவலைப்படாதீர்கள். விரைவில், கிழக்கு பதிப்பகம் "பத்ரி" அவர்களிடம் இருந்து விரிவான பதிவுகள் வரலாம். அவர் தனது குழுவினருடன் இப்போது அங்கு தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

 
At October 05, 2006 8:53 PM, Blogger ஓகை said...

//Nerhu family decide Political leadership.//

வரலாற்றிலிருந்து நாம் பாடம் எடுக்கவிடில் இந்நிலை எப்படி மாறும்?

// If Ragul gandhi married a Chiness, Chiness can become a PM in India.//

நடக்கும். இதை நடத்துவதற்கு துடிக்கும் மக்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

 
At October 05, 2006 8:54 PM, Blogger ஓகை said...

//"பத்ரி" அவர்களிடம் இருந்து விரிவான பதிவுகள் வரலாம். //

எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 
At October 05, 2006 9:01 PM, Blogger ஓகை said...

//for a European Union State (if it ever gets that far).//

ஜெர்மனியும் ஃபிரான்சும் திறந்த எல்லைகளையுடைய நாடுகளாக இருப்பதை நான் கண்டு உணர்ந்திருக்கிறேன். நமது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள மொழிப் பிரச்சனை போல அங்குமிருக்கிறது. ஒரே பணம். ஒத்த கலாச்சாரம். பெரும்பான்மை நாடுகளின் ஜனநாயகம் இவையெல்லாம் ஐரோப்பியக் கூட்டமைப்பை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன்.

 
At October 05, 2006 9:03 PM, Anonymous Anonymous said...

நமக்குத்தான் ( அதாவத் தமிழ்மண வலைப் பதிவாளர்களுக்கு) வர்க்கபேதத்தையும் வர்ணபேதத்தையும் வைத்துச் சண்டைபோடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறதே - இந்த மாதிரி நல்ல விஷயஙகளைப் படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது தம்பி?

அன்புடன்
நாட்ராயன், வெள்ளக்கோவில்

 
At October 06, 2006 12:14 AM, Blogger ரவி said...

நல்ல பதிவு...அருமையான கருத்தை முன்வைத்து இருக்கிறீர்கள்...

 
At October 06, 2006 12:38 PM, Blogger ஓகை said...

நாட்ராயன்,செந்தழல் ரவி,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

 
At October 26, 2006 6:52 AM, Anonymous Anonymous said...

இந்துக்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள்
என்பதை சொல்லாமல் சொல்கிறாறோ என்னவோ!!

 

Post a Comment

<< Home