Saturday, October 07, 2006

அப்சலை தூக்குல போடுங்க "டா!"

'...தூக்குல போடுங்கடா' என்றொரு பதிவு முத்து-தமிழினி எழுதியிருக்கிறார். அங்கு இட்ட பின்னூட்டம் இது.

இதை என் வலைப்பூவில் ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

அதிர வைக்கும் தலைப்புகள் வைப்பது இப்போது வலையுலகின் போக்கு. அதன்படியும் மற்றபடிக்கு நுனுக்கமாயும் வைக்கப்பட்ட தலைப்பு. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, விசாரனை முடித்து, தீர்ப்பளித்து, அதை நடைமுறைப் படுத்தப் போகும் அரசு ஊழியர்களைத்தான் அப்படி டா போட்டு அழைக்கிறார் என்று முதலில் தோன்றினாலும் இங்கே ஒரு இக்கு வைத்திருகிறார். அதாவது 'என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....' . முத்துவை தேசத் துரோகி என்று அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தூக்கில் போடுங்க என்கிறார். இல்லை, போடுங்க 'டா' என்கிறார். பின்னூட்டங்களில் அவர் மையமாக எழுதிவிட்டதாக பலரும், மேலும் அவருமே பதிவில் ஐயப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான பதிலைத் தான் அந்த டா வில் சூசகமாகச் சொல்லியிருக்கிறாரோ? தேசத் துரோகி என்று தன்னை யாரும் அழைக்கவில்லை என்றால் தூக்கில் போட வேண்டாம் என்கிற மறை பொருளையும் சொல்லுகிறாரோ என்கிற ஐயத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அவர் தான் தேசத்துரோகி என்று அழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறை வியக்க வைக்கிறது. இந்த வியப்பு முத்துவின் முந்தைய பதிவுகளைப் படித்ததனால் வருகிறது.

' மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு கனக்கு. எப்படி கணக்கில் எடுக்கவேண்டும் என்றும் முத்து தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கூடவே பிரபு ராஜதுரை எழுதிய இதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ""ஷரியா" - சரியா?: ஓர் எதிர்வினை " என்கிற கட்டுரையை அவர் மரத்தடி குழுமத்திற்காக எழுதியிருக்கிறார்.

குழலிக்கு பிடிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார். குழலி முதல் பின்னூட்டத்தில் 'அதே அதே' என்கிறார். அடுத்த பின்னூட்டத்தில் 'அது....' என்று சொல்கிறார். அகவே குழலியின் பதிவுடன் சேர்த்தே இந்தப் பதிவுக்கும் பொருள் கொள்ளலாம் என்பதும் ஒரு விருப்பத் தேர்வாக(choice) இருக்கிறது.

இந்தப் பதிவின் திரண்ட கருத்து அந்த 'டா' வில் இருக்கிறது என்பதே நான் புரிந்து கொண்டது.

'ஆமாண்டா' என்றும் அதற்கு மேலும் பின்னூட்டங்கள் வரக்கூடும். நல்ல விளக்கங்களுடன் கூடிய பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.

1 Comments:

At October 08, 2006 12:57 AM, Blogger Muthu said...

அடா புடா என்று ஏதாவது பின்னூட்டம் வந்ததா?:))

அந்த வாக்கியத்தில் ஒளிந்துள்ள அரசியலை நீங்கள் எளிமைப்படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது.

அந்த வாக்கியத்தை பற்றி வஜ்ராவுக்கு நான் ஒரு விளக்கம் கொடுத்துக்ளென்.தை படிக்கலாம்.

மற்றபடி பிரபு அவர்களின் மரத்தடி சமாச்சாரங்களை படிக்கிறேன்.ஒரு புதிய பதிவு எழுதலாம் என்று தோன்றுகிறது.

 

Post a Comment

<< Home