படைப்பின் இலவசம்
சென்னை நகரில் ஒரு சின்ன வீட்டுக்குள்ளே நடந்த ஓர் உரையாடல்.
"மச்சான், மச்சான், கபாலி மச்சான்"
"இன்னாமே கப்பு, இன்னா கூவுற, ரோசனய கலைக்காதமே"
"இன்னா ரோசன மச்சான், அப்புடியே முங்கிகின. என்னாண்ட சொல்லு "
"பிர்ச்சனயே உன்னாலதாமே! நீ யாரு எத்த கேட்டாலும் குடுத்துகினே கீறியே, அதான் பிர்ச்சனையே!!"
"கேட்டா குடுத்துடு மச்சான்"
"இன்னா பேச்சு பேசுற நீ, பாத்தரம் பாத்து பிச்ச போட தாவலயா?"
"பிச்சைய பத்தி நீ பேசாத மச்சான், நீயே பிச்ச எட்த்து துன்ற ஆளுதான"
"இன்னா குத்திக் காமிக்கிறியா?"
"ஆமா, பத்து ஊட்டு சோறு துன்றதுக்கோசரம் பிச்ச எடுக்கிற நீ. அத்த வுடு, யாரு உன்னாண்ட இன்னா கேட்டாங்க?"
"அல்லாருக்கும் வவுறு நெறைய சோறு வோணுமாம், அல்லாருக்கும் கரீட்டா படி அளக்குனுமாம். அல்லாரையும் அப்பிடியே எரிச்சி பஸ்பமாக்குலாமான்னு தோனுது"
"நீ பொண்டாட்டின்னு கூட பாக்காம என்னையே உயிரோட எரிச்ச ஆளாச்சே, நீ செய்வய்யா, கவாலி!"
"அதான் பொழச்சி முழுசா வந்துட்டியே கப்பு! இன்னா கப்பு ஒன்னு சொல்லகுடாதுன்ற. இந்த கபாலிய காவாலின்னு கபால்னு சொல்றியே!!"
"இதுக்கெல்லாம் ஒன்னியும் கொர்ச்சல் இல்ல!"
"கப்பு உனுக்கு காண்டு ஆவாதேடி,
கற்பகமே,
தப்பு ஏது செஞ்சேன், கப்பு உனுக்கு..."
"ஐயே, இன்னாதுய்யா அரத பழசு பாட்டு?"
"புச்சு வோணுமா? இந்தா கேளு,
'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ
பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..."
"டேய் கபாலி...."
"இன்னாடி புர்சனயே டேய்ன்ற?"
"இன்னாய்யா துப்புகெட்ட பாட்டு இது? யாரோ இன்னாவோ கேட்டாங்களே அத்த கவனிய்யா"
"என்னால எதையும் இலவசமா குடுக்க முடியாது"
"இன்னாது இலவசமா? எதுய்யா இலவசம்? நாம வழிய மட்டும் காமிச்சா போதும். சோறு கெடச்சிடும். அவுங்க கையில கீறத அவுங்கலாண்ட கொடுத்தா அது இலவசமா? சொல்ல போனா நீயே ஒரு இலவசம்".
"இன்னாது, இன்னாது, நான் இலவசமா?"
"நானும் தான் இலவசம். அந்த பெர்சு ஒரு கேள்வி கேட்டுச்சே இன்னிக்கி வரைக்கும் பதில் சொன்னியா அதுக்கு?"
"இன்னா பெர்சு, இன்னா கேள்வி."
"உன்ன எதுத்து கேள்வி கேட்டுச்சுன்னு உயிரோட எரிச்ச தமிழ் பெருசு, நக்கீரன்."
"கேள்வி இன்னா?"
"சங்கு அருப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்? - எனாக்கவது ஒரு சாதி கீது உனக்கு இன்னாய்யா சாதின்னு கேட்டுகினார் பாரு"
"ஆமா நமக்கு சாதி இல்ல. அது சரி, நாம இலவசமா?"
"மனுசன் மனுசனுக்காக குடுத்துகிட்ட இலவசம் தான் நாம. இன்னா பிரியுதா?"
"மனுசனுங்களே தயார் பண்ணி மனுசங்களுக்கு குடுத்துகிற அரசாங்கங்கள் மாதிரி"
"அக்காங்! வைரமுத்து ஒரு கவிதையில ஏதிகினார் பார் -
'மனுசா நீ படா ஆளுப்பா. இறைவனையே படைச்சுகினியே'..."
ஒரு அசரீரி கேட்கிறது.
"ஐயனே, குலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட உன்னை ஏது குலம் என்று கேட்டேனே, என்னை மன்னிப்பாயா? - சொர்கத்திலிருந்து நக்கீரன்."
"சரி நக்கீரா, இந்தா இலவசமா ஒரு மன்னாப்பு!"
*********************
18 Comments:
நல்ல நடை.
நல்ல கருத்து.
நல்ல பதிவு.
//'சிர்ச்சி சிர்ச்சி வந்த சின்ன கப்பு நீ
பிர்ச்சி பிர்ச்சி வச்ச பிச்சுப் பூவும் நீ.'..." //நன்று
//"மனுசன் மனுசனுக்காக குடுத்துகிட்ட இலவசம் தான் நாம. இன்னா பிரியுதா?"// அருமை!
கள்ளம் கபடம் அற்ற சிறுபிள்ளை தமிழ்.
உண்மையான மனிதத்தை உணரவேண்டும் என்றால், உங்கள் பதிவில் வரும் பாத்திரங்களின் போல உள்ளவர்களின் மத்தியில்தான் அது முடியும்.
நன்றி.
தலையே சுத்துது ஓகை.. மெட்ராஸ் பாசைல கதையை படிச்சு முடிக்கிறப்போ.. எப்படிப்பா.. இப்படி எல்லாம் முயற்சி பண்றீங்க.. ரொம்ப நல்லா இருக்கு ஓகை
ஓகை! தலைப்பு கண்டு இது மரபுக்கவிதை என ஓடிவந்தால் மெட்ராஸ் பாஷைல கதை!நல்லாத்தான் கீது!
ஷைலஜா
மாசிலா, கார்த்திகேயன், ஷைலஜா, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
ஷைலஜா, மரபு கவிதை போட்டிக்காக தயாராகிக் கொண்டு இருக்கிறது.
ஹ்ம், பாதி படிச்சவரைக்கும் ஒன்னியும் பிரீல. அப்பால கொஞ்சூண்டு பிரிஞ்சுது. ஆனா நல்லாக்கீர மாதிரியும் தோண்சு.
என்னுமோபா ப்ரைஸ் கடச்சா சரி.
நம்ம ஸ்டோரியும் வந்து படிப்பீங்களா தல?
This comment has been removed by a blog administrator.
ஜயன், கதையை மீண்டும் படித்தால் புதிதாக இருக்கும் - புரிந்த கோணத்தில் படிப்பதால். முயன்று பாருங்கள். உங்கள் கதையை ஏற்கனவே படித்துவிட்டேன். என் கருத்து உங்கள் பதிவில்
ஓகை, நீங்கள் சொன்னது போல் மறுபடியும் படித்தேன்.
அருமையா இருக்கும்.
starting சென்னை தான் குழப்பி விட்டது என்னை.
சென்னையில் சின்ன வீட்டில் அவங்க இருக்கக் கூடாதான்னு கேட்டுடாதீங்க :)
Naina nallathan keethu ;)
இன்னாப்ப 'செயகாந்த சினிமாக்கு போன சித்தாளு' கதைகனக்கா ஈக்கு தமிலு வால்க. தமிள்(ழ்) தலைநகர் மெட்ராஸும் வால்(ழ்)க
//சென்னையில் சின்ன வீட்டில் அவங்க இருக்கக் கூடாதான்னு கேட்டுடாதீங்க :) //
ஜயன், ஒரு பக்தனை சோதிப்பதற்காக அவர்கள் அவ்வாறு சென்னைக்கு வந்து வசிக்கிறார்கள்.
ஆமா, மெய்யாலுமா!
C.M.HANIFF,
வந்து பாராட்டுனதுக்கு ரொம்ப நன்றி நைனா.
என்னார், வாங்க. பாராடுக்கு நன்றி.
எங்க பாஷைல இன்னா க்ஷ்டப்பட்டு எயுதுறீங்க!
எங்க ஊரு பாஷை அவ்ளோ சுலுவா வந்துடுமா? அதுக்கு சென்னைத் தண்ணீர் அல்லவா குடிக்க வேண்டும்?
அது நமக்கு வரவே வராது ஓகை காவிரிதண்ணீருக்கு ஈடு இணையேதுமில்லை இப்போ அதுவும் கெட்டுடுச்சு
மெட்ராசு பாஷையிலும் தூள் கிளப்பியிருக்கிறீர்கள். வித்தியாசம் காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
நெல்லை சிவா, மிக்க நன்றி.
ஹாஹாஹாஹாஹா. நல்லா கீதே இந்த டயலாக்கு. :-)))
இந்தாங்க ஓகை ஐயா!
எலவசமா ஒரு சினிமாவுக்கு
எலவசமா ஒரு பின்னூட்டம்!
:))
கப்பு வல்லி ஆத்தா ஒன்
காலைப் புடிச்சேன் நானும்
நற்கதி அருள்வாய் அம்மா!
Post a Comment
<< Home