ஐம்பது சதவிகித எச்சில்
இந்தப் பதிவில் மூன்று சதவிகிதத்தின் எச்சிலைப் பற்றிய கதையும் கவிதையும் மிக உணர்ச்சிகரமாகப் பதியப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பெரும்பாலான பதிவுகள் உடனடியாக உணர்வைத் தொடும் வகையிலேயே எழுதப்படுகின்றன. பெரும்பாலும் அவை அறிவைத் தொடுவதில்லை என்பது என் அனுமானம். ஒரு பதினைந்து சதவீதத்தின் மேல் இருக்கும் பரிவாக இவற்றைக் கொள்வதா அல்லது மூன்றின் மேலிருக்கும் வெறுப்பாக இவற்றைக் கொள்வதா? என் கருத்துகளைப் பதிகிறேன்.
மூன்றைப் பொருத்தவரை பல நேரங்களில் ஐம்பதும் ஒன்றுதான் பதினைந்தும் ஒன்றுதான். மூன்றுக்கும் 65க்கும்(50+15) இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 50க்கும் 15க்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் வேறு. 15ந்தின் இன்றைய பிரச்சனைகள் பலவும் 50லிருந்தே வருகின்றன. இதற்கு மூல காரணங்களை ஆராயும் போது நம்மை மூன்றுக்கு இட்டுச் செல்லலாம். அப்போது மூன்றைச் சாடுவதுடன் 50ன் வேலை முடிந்துவிடுகிறதா? ஆனால் அந்த சாடல்தான் எளிதாகவும் விருப்பத்துடனும் செய்யப்படுகிறது.
மூன்றின் எச்சில் முகத்தில் வடிவது இன்று இயலாத ஒன்று. 50ன் எச்சில் குளத்தில் தத்தளிப்பவனுக்கு உடம்பெல்லாம் எச்சில். அவனைக் கரை சேர்த்துவிட்டால் அப்புறம் 65ம் சேர்ந்து மூன்றின் முகத்தில் துப்பலாம்.
என் பதினான்கு வயதில் நானும் என் நண்பனும்ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தோம் அவ்வூரில் மூன்று ஒன்றுக்கும் குறைவு. 50 ஏறக்குறைய 90. 15 சுமார் 10. ஊர் எல்லையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்த்போது வெளியிலிருந்து வந்த ஒரு பெரியவர் துண்டைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ஐயா என் விளித்து அங்கிருந்த இளைஞரிடம் ஏதோ சொல்லிவிட்டு பிறகு ஒற்றையடிப் பாதையில் ஊரை சுற்றிக்கொண்டு சென்றார். 35 ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் நிலமை அப்படியே இருக்கிறது.
இதற்கு காரணமாக மூன்றைக் கருத என்னால் முடியவில்லை. மூன்றின் ஆதிக்கத்தை ஒழிக்க நினைப்பவர்கள் 15ந்தை ஆட்டிப்படைகிறார்கள். என்னதான் நடக்கிறது தமிழகத்தில். ஆக்கப்பூர்வமாக ஏதாவது நடந்திருக்கிறதா? நானும் பிறந்ததிலிருந்து சாடல்களையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
50 ஆண்டுகளாக 15 முன்னேறுவதற்கு 50ன் பங்களிப்பு என்ன? 50 செய்த கொடுமைகள் என்ன? தீர்வை நோக்கி அதன் செயல்பாடுகள் என்ன? கீரிப்பட்டியும் பாப்பாப்பட்டியும் காப்பாற்றியதை தொடர்ந்து காப்பாற்றுவதற்கும் அதைக் கூத்தைப்பாருக்கு நீட்டிப்பதற்கும் யோசனைகள் என்ன?
20-11-2006 அன்று வெளிவந்த இந்து பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். சுட்டி. ஆந்திராவில் 4 தலித் பெண்கள் இயக்கும் தனியார் வானொலி நிலையத்தைப்பற்றிய செய்தி. இது போன்றவை தமிழ்நாட்டில் நடக்கிறதா? எங்கே செய்திகள்? எங்கே விளம்பரங்கள்?
மொத்தப் பொறுப்பும் 50க்கு இருக்கிறது. நான் 50ல் இருந்துகொண்டு கூனிக்குறுகி இந்த கேள்விகளைக் கேட்கிறேன். 50ன் பதில் என்ன?
மூன்றாவது கவிதை
உவமைகளின் கயமை
உண்மையிலிருந்து
வெகு தூரம் விலகி இருக்கிறது
உண்மையான கவிதையைப் போலவே!
பி.கு:
1. அனானிப் பின்னூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
2. அனானி இல்லையென்றாலும் அசிங்க மொழிக்கும் அனுமதி இல்லை
(எது அசிங்கம் என்பது என் அறிவுக்கே உட்பட்டது)
3. எதிர் கருத்துகளை விரும்பி வரவேற்கிறேன்.
19 Comments:
:-)))))))))))))))
லக்கி, உங்கள் பின்னூட்டத்திற்கு பொருள் புரியவில்லை. என் பதிவு நகைப்புக்கு இடமான ஒன்றா?
டோண்டு ஐயா, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
டோண்டு அய்யா பின்னூட்டமே இடவில்லையே? ஏன் நன்றி சொல்கிறீர்கள்?
ஒருவேளை வாய்சொல்வீரன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவரை டோண்டு சார் என்று நினைக்கிறீர்களா? :-)
வாய்ச்சொல் வீரன், வருகைக்கு நன்றி.
லக்கி, டோண்டு ஐயா பின்னூட்டத்தை வெளியிடவில்லை. சில பின்னூட்டங்களை வெளியிடுவதாக இல்லை. ஒரு கருத்தோ அல்லது எதிர்கருத்தோ இருக்கும் பின்னூட்டங்களை கண்டிப்பாக வெளியிடுவேன். உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்தை எதிர்பார்க்கிறேன். ஏதாவது இருந்தால் தயவு செய்து கூறுங்கள். காத்திருக்கிறேன்.
என் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையோ கேட்கிறீர்களே?
அருள்குமார் பதிவில் போட்ட பின்னூட்டம் தொடர்புடையதால் இங்கேயும், சுட்டியை தொடர்ந்தால் படிக்கலாம்...
அந்த 3 சதவீத எச்சில் சம்பவம் உண்மையிலேயே நடந்தது. அந்த கவிதையை எழுதியவருடைய சொந்த அனுபவம் அது. கற்பனையல்ல.
கவிதைக்கு பொய்யழகு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் தலித் இலக்கியங்களை வெறும் கவிதையாகவோ, கதையாகவோ நினைக்க முடியாது. காரணம் அவர்கள் எழுதுவது அவர்களது வாழ்க்கை.
அந்த 3 சதவீத எச்சில் சம்பவம் உண்மையிலேயே நடந்தது. அந்த கவிதையை எழுதியவருடைய சொந்த அனுபவம் அது. கற்பனையல்ல.
கவிதைக்கு பொய்யழகு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் தலித் இலக்கியங்களை வெறும் கவிதையாகவோ, கதையாகவோ நினைக்க முடியாது. காரணம் அவர்கள் எழுதுவது அவர்களது வாழ்க்கை.
நல்ல பதிவு.
//மூன்று சதவிகிதத்தின் எச்சிலைப் பற்றிய கதையும் கவிதையும் மிக உணர்ச்சிகரமாகப் பதியப்பட்டிருக்கிறது. //
தாங்கள் கதை என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. தலித்திலக்கியம் பற்றி சொன்னதைத்தான் என்று எடுத்துக்கொண்டாலும்.. அதௌ மராட்டியத்தில் தானே தோன்றியது?
அடுத்து வாய்ச்சொல் வீரன் என்பவருக்கு,
//நல்ல கற்பனை. அகான வெளிப்பாடு, சரியாய்த்தான் சொல்லி இருக்கிறார்கள். கவிதைக்கு பொய் அழகு// என்பது தங்களின் பின்னூட்டமா? பதிவராக இருந்து கொண்டு, ஏன் அனானியாக வந்தீர்? அதனால் தான் வெளியிட வில்லை. பதிவராக வாருங்கள் இடம் தருகிறேன்.
ஓகை,
நான் ஏதோ மூன்று சதவிகிதத்தை மட்டும் எதிர்ப்பதாக தாங்கள் கருதினால் ஐ'யாம் சாரி சார்! இச்சமுகத்தில் இருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத்தான் என் குரல் இருக்கிறது. அதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராடும் நிலையில் தான் இருக்கிறேன்.
பதிவை இன்னும் எளிமையாக சொல்லி இருந்தால்.. இதன் நுட்பம் அறியாத்வர்களும் எளிமையாக புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்குமோ என்று எண்ணுகிறேன்.
லிங்க் கொடுத்தமைக்கும் நன்றி!
குழலி, அந்தப் பதிவு நான் ஆர்வமாக படித்துக்கொண்டு வரும் ஒரு பதிவு. அங்கே ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
லக்கி அந்த சம்பவம் விவரிக்கப்பட்டிருந்த விதம் கதையைப்போலத்தான் இருக்கிறது. இது நிஜவாழ்வில் நிகழும் சாத்தியக்கூறு மிக மிக அதிகம். இன்னும் மோசமான எள்ளல்களுடன் இது நிகழவும் வாய்ப்பிருக்கிறது. அந்த அம்மாவுடன் பேசுகிறவர் எந்த ஜாதியாக இருந்தாலும் உரையாடல் இது போலவே இருக்கும் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.
//பதிவை இன்னும் எளிமையாக சொல்லி இருந்தால்.. இதன் நுட்பம் அறியாத்வர்களும் எளிமையாக புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்குமோ என்று எண்ணுகிறேன்.//
நானும் வழிமொழிகிறேன்.
பாலபாரதி, லக்கிக்கு கொடுத்திருக்கும் பதிலைப் பாருங்கள். பிரச்சனை கதையா உன்மை நிகழ்வா என்பதைப் பற்றி இல்லை. உண்மையில் இதைவிட நாகரீகக் குறைவான எள்ளல்களை பல ஜாதியிடமிருந்தும் கண்டிருக்கிறேன். நீங்கள் கண்டதில்லையா?
அச்சம்பவ விவரிப்பின் முடிவில் மூன்று சதவீதம் என்பதற்கு பதிலாக ஐம்பத்திமூன்று சதவீதத்தின் எச்சில் முகத்தில் வழிவதாக எழுதியிருந்தால் சரியாக இருக்கும். இப்படி எழுதத் தொடங்கினால் எழுத்து உண்மைக்கு மிக அருகில் வரும், நமது பார்வை மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கும், தீர்வு கண்ணுக்குத் தெரியும்.
உரையாடலில் அந்த அம்மா காட்டியிருக்கும் பவ்வியத்தை அவர்கள் எல்லா ஜாதியிடமும் காட்ட வேண்டியிருக்கும் என்கிற உண்மை சுடுகிறது.
எளிமையாகச் சொல்வதற்கெல்லாம் பழகிக் கொண்டிருக்கிறேன். நன்றி.
ஓகை
கூத்தைப்பார் செய்தி தலித் விவகாரம் இல்லை அங்கு தலைவருக்க தலித் தலைவரை ஏகமனதாக தேர்ந்து எடுத்தாகவிட்டது மற்ற உறுப்பினர்கள் விவகாரம் தான்.
என்னார்,
அப்படியாயின் நன்று. பத்திரிக்கை செய்தி வேறு விதமாக இருந்தது.
தங்கவேல், நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்? எல்லாருக்கும் புரியுற மாதிரி எழுத முயற்சி பண்ணிக்கொண்டே இருக்கிறேன். வருகைக்கு நன்றி.
தொட்டால் சுடும்! சினிமா தலைப்பல்ல! நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயம். ஓகை, உங்கள் ஆதங்கம் புரிகிறது. புரிந்துகொள்ளப்படவேண்டிய உயரத்திலிருப்பவர்கள் எண்ணத்தால் அதல பாதாளத்திலிருக்கிறார்கள். என்னத்த எழுதி, என்னத்த 'சாதி'க்கிறது; இப்படி அதிக பின்னூட்டங்கள் பெருவதைத் தவிர?
/////ஒருவேளை வாய்சொல்வீரன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவரை டோண்டு சார் என்று நினைக்கிறீர்களா? :-)////
அவரை கொஞ்சம் லூஸ்ல விடுங்களேன்...
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) இப்படி சிரித்தேன் லக்கி..
இந்த பதிவை பற்றியா ?
பாரதி பாடல் நியாபகம் வந்திட்டது...கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை ஓகை அவர்களே !!!
Post a Comment
<< Home