மதயானை
மதயானை
ஒரு மத யானை மிக வேகத்தில் ஓடியதை எனக்கு படம் பிடித்துக் காட்டியவர் அமரர் கல்கி. அதற்குப் பின் வலைப்பதிவர் பொன்ஸ். அவருடைய ஓடும் யானைப் படத்தை பாராட்டி எழுத வேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அவருடைய நட்சத்திர வாரம் நிறைவடையும் நேரத்தில் எழுதி விடுகிறேன்.
பொன்னியின் செல்வன் ஒரு மிகப் பிரமாண்டமான புதினம்.அது சொல்லும் செய்திகள் ஒவ்வொரு துறையிலும் ஏராளம் ஏராளம் ஏராளம். நான்காண்டுகளுக்கு முன் ஒரு மதன் பதிலில் உலகின் மிகச் சிறந்த நாவலென்று அதைச் சொல்ல, கமலஹாசனும் அதையே சொல்ல, நான் மதிக்கும் இரண்டு பெரிய ரசிக மணிகள் இவ்வாறு சொல்லவே, அதைத்தேடிப் பிடித்து ஒரே மூச்சில் அத்தனை பாகங்களையும் படித்து, வெகுவாய் லயித்து போய் மீண்டும் மீண்டும் நான்கு முறைக்கு மேல அத்தனை பாகங்களையும் படித்து படித்து, அதன் பிறகு கூகிளில் தேடி பொன்னியின் செல்வன் இணைய மடற்குழுவில் இணைந்து, கிருபா சங்கர் கொடுத்த ஒரு சுட்டியினால் மீனாக்ஸ் எழுதிய பொன்னியின் செல்வன் தீம் பார்க் பற்றிய ஒரு அறிவியல் புனை கதையைப் படித்து, மரத்தடியில் சேர்ந்து, எழுத்து வாசனை பெற்று, இன்று நானும் ஒரு வலைப்பதிவர் என்பதில் அந்த மதயானைக்கு ஒரு பங்கு இருக்கிறது.
புதினத்தில் இரண்டு முறை கல்கி மதயானை ஓட்டத்தை விவரித்திருப்பார். யானைமொழி தெரிந்த அருமொழிவர்மன் யானையை மதம் பிடித்தது போல் நடிக்கச் சொல்லி அதிவேக யானையோட்ட உதவியால் தப்பிச் செல்வார். இதில் முதல் ஓட்டம் மிக சுவராஸ்யமானது. பூங்குழலியுடன் வட இலங்கையில் யானை இறவுத் துறைவரை அவர்கள் செய்யும் பயணம் என் மனதில் படம் போல் பதிந்திருக்கிறது.
பொன்ஸின் படம் எனக்கு இக்காட்சியை மீண்டும் மீண்டும் புதிது படுத்துகிறது.
படத்தில் யானை ஒரு இளநகையின் தொடக்கத்திலிருக்கிறது.
தொடக்கத்துடன் அது உறைந்து போயிருக்கிறது.
கண்களில் மின்னிடும் குறும்பு அதை உறுதி செய்கிறது.
மதம் பிடித்தது போல நடிக்கும் யானைக்கு மட்டும்தானே இவை இருக்கும்?
முதன் முறை மேடையேறும் சிலர் சிரித்துக் கொண்டே இருப்பதைப் போல! வனமேடையில் நடிக்கும் யானையின் மனமேடைச் சிரிப்பு.
சோர்வின் சுமைகூட அல்ல, சுமையின் வலிதெரியா உற்சாக ஓட்டம்.
பொன்னியின் செல்வன் பொம்மை படமாவது யாராவது எடுக்கும் வரை பொன்ஸின் செல்வம் என் நினைவிலிருக்கும்.
மிக நன்றி பொன்ஸ்.
20 Comments:
ஓகை
தலைமுறைகள் தாண்டியும் ரசிக்கப்படும் புத்தகம் பொன்னியின் செல்வன்..
ஆமாம். பொன்ஸ் அவர்களின் யானைகள் மதயானைகளா என்ன.. அந்த யானைகள் குழுந்தை தனமாக அல்லவா தெரிகின்றன.
ஓகை,
எந்த யானை உங்களுக்கு நினைவுப் படுத்துகிறது என்று சொல்லவே இல்லையே...
இருப்பினும் மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வன் பற்றிய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்...
பதிவு மிக நன்றாக உள்ளது..
I have uploaded the image. Thanks Pons for your help
Out of town. So English.Bear with me.
13 வயதில் முதல் முறையாய் படித்தேன் 5 பாகத்தையும், பிறகு 18 வயதில் பின் 23லிலும் சற்றேறக்குறைய 5 ஆண்டுக்கு ஒரு முறை படித்து வருகிறேன் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொருவிதமான வாசிப்பனுபவம் தருகிறது. அதுதான் அதன் சிறப்பு. எல்லோருக்கும் வந்தியத்தேவன் பிடிக்கும் என்றால் எனக்கு பிடித்தது குந்தவையும் ,பழுவேட்டரையரையும்.
சாத்வீகன்,
படத்தை வலையேற்றி விட்டேன். இப்போது பாருங்கள்.
மதம் பிடித்ததுபோல் நடிக்கும் யானையின் படம்.
பொன்ஸ்,
இப்போது எந்த யானை என்று தெரிந்துவிட்டதா!
//இருப்பினும் மீண்டும் ஒருமுறை பொன்னியின் செல்வன் பற்றிய நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்...//
"முதன் முறை மேடையேறும் சிலர் சிரித்துக் கொண்டே இருப்பதைப் போல! வனமேடையில் நடிக்கும் யானையின் மனமேடைச் சிரிப்பு."
இப்போது மீண்டும் பொன்னியின் செல்வனில் அருமொழியும் பூங்குழலியும் செய்யும் அந்த யானைப் பயணத்திப் படித்துப் பாருங்கள்.
செந்தில்,
எனக்கு ரொம்பப் பிடித்தது பூங்குழலிதான். ஒரு ஆங்கிலக் கவிதைகூட எழுதியிருக்கிறேன்.
மத யானைன்னு பார்த்ததும் எதோ மதம் என்பது யானை மாதிரி சில யானைகளுக்கு மட்டும் மதம் பிடிக்கிறது என்று எழுதி இருப்பீர்கள் என்று நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை(:-DDDD சும்மா) பொன்னியின் செல்வன் படித்தது மிக லேட்டாகத் தான்.
கல்கி வந்தியத்தேவன் பாத்திரப் படைப்பின் மூலம் அமரனாகி விட்டார். எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் வந்தியத்தேவனும் குந்தவையும் சந்தித்துக் கொள்ளும் இடங்கள். குந்தவை நந்தினி சந்திப்புகளும் பிடிக்கும்.
நந்தினி, வந்தியத்தேவன், குந்தவை ஆகியோரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
Ebook வடிவில் பொன்னியின் செல்வன் என் கூடவே இருக்கிறது. வேலை இல்லாத சமயம் எனக்கு பிடித்த பகுதிகளை படித்துக் கொண்டிருப்பது வழக்கம். :-))))).
நல்ல பழக்கம். கல்கியின் பொன்னியின் செல்வனால் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஓகை ஐயா. பொன்ஸின் யானையின் பின்னால் இவ்வளவு பெரிய கதை இருக்கிறதா? இன்று தான் படித்தேன். :-)
நானும் இரு முறை பொன்னியின் செல்வன் முழுவதுமாகப் படித்து முடித்துவிட்டேன். செந்தில் செய்வதும் போல் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இல்லை. 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை படித்தாலும் புதிதாகத் தோன்றும் இந்தப் புதினம் என்று நினைக்கிறேன்.
சார் நான் இதுவரைக்கும் பொன்னியின் செல்வன் படித்ததில்லை. யாராவது e-book இருந்தா அனுப்ப முடியுமா?
ஐடி. naadoodi@gmail.com
//13 வயதில் முதல் முறையாய் படித்தேன் 5 பாகத்தையும், பிறகு 18 வயதில் பின் 23லிலும் சற்றேறக்குறைய 5 ஆண்டுக்கு ஒரு முறை படித்து வருகிறேன் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொருவிதமான வாசிப்பனுபவம் தருகிறது. அதுதான் அதன் சிறப்பு. //
செந்தில் சொன்னது அப்படியே ரிப்பீட்டு.. (முதன்முறை படித்தது பன்னிரண்டு வயதில்..கிட்டத் தட்ட ராஜீவ் இறந்த சமயம்.. :) )
எனக்குப் பிடித்த பாத்திரங்கள், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, நந்தினி, கரிகாலன், முக்கியமாக பொன்னியின் செல்வர்.
இதை இரண்டாம் முறை படித்து முடித்து நான் எழுதி வைத்த விமர்சனத்திலிருந்து "புத்தகத்தின் இறுதியில் கூட மனம் பொன்னியின் செல்வனின் பொன்முகத்தை ஒருமுறை காணமாட்டோமா? நாமும் ஒரு சோணாட்டு வீரனாய், ஏன் வந்தியத் தேவனாய்த், தூது போக மாட்டோமா? திருமலை நம்பியாக ஒற்றுவேலை புரிய மாட்டோமா? குறைந்த பட்சம் நந்தினி தேவியாகவாவது, அவளுக்கு நற்புத்தி சொல்லும் தோழியாகவாவது மாறமாட்டோமா? என்ற எண்ணம் மனதில் உண்டாகிவிடுகிறது."
படிப்பவரை கதைக்களத்துக்கே அழைத்து சென்றவர் அமரர் கல்கி. பொன்னியின் செல்வனை படித்த அனைவரும் உடன்படுகிற கருத்து இது. இந்த பெருமை வேறெந்த சரித்திர நாவலுக்காவது உண்டா எனத் தெரியவில்லை.
என் முதல் சரித்திரக் கதை கப்பிப்பயல் படித்தாயிற்றா?
நாடோடி, எல்லா வேலையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு முதல் வேலையாக பொன்னியின் செல்வனைப் படிப்பீர்களாக. படிக்கத் தொடங்கினால் புத்தகத்தை கீழே வைக்க மனமே வராது.
மின்னூல் இங்கே இருக்கிறது.
http://www.chennailibrary.com/
http://www.chennailibrary.com/ebooks/ponniyinselvan.html
Problem posting this in your recent post! Pl. rectify!
களியை மட்டும் சொல்லிவிட்டு, கூடவே தொட்டுக்கொள்ள கிடைக்கும் அந்த அனைத்துக் காய்களும் போட்டுக் கொதிக்க வைத்த கூட்டின் மகிமையை விட்டு விட்டீர்களே!
சூடான களியுடன் இதனையும் கலந்து சாப்பிட....சாப்பிட....சாப்பிட...சாப்பிட....!!!!!
ம்ம்ம்ம்....அந்த நாளும் வந்திடாதோ!
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
ஆ! ஆ!!
பி.க.த.!!!!
:))
ஓகை சார்!
சிவகாமியின் சபதத்தில் பரஞ்சோதி அறிமுகக் காட்சியில் வரும் மதயானையைப் பற்றியும் எழுதியிருக்கலாம்....
எஸ்கே,
உங்கள் பின்னூட்டம் அங்கு வந்து விட்டது. பதிலும் போட்டுவிட்டேன்.
//ஆ! ஆ!! பி.க.த.!!!! :)) //
ஐயா உங்கள் சொற்சுருக்கம் எனக்கு பிடிபடவில்லையே!! நீங்களே விளக்கிவிடுங்களேன்.
லக்கி, ஜேம்ஸ்பாண்டு படங்களின் ஆரம்பக் காட்சிகளைப் போல சிவகாமியின் சபதத்தின் ஆரம்ப காட்சிகள் அதி அற்புதமாக இருக்கும். ஆனால் அந்த மதயானை உண்மையிலேயே மதம் பிடித்த யானை. பொன்னியின் செல்வனின் யானையோ மதம் பிடிப்பது போல நடிக்கும் யானை. இந்த பொன்ஸின் யானையின் கண்ணையும் வாயையும் பாருங்கள், ஒரு சிறுபிள்ளைச் சிரிப்பு இருக்கும். அதனால்தான் பொன்னியின் செல்வனின் யானையோடு பொருத்திப் பார்த்துவிட்டேன்.
ஓகை!
இந்த மதயானையை படித்த போது ,தமிழகத்தில் ஓர் கோவில் யானைக்கு எந்த வகைப் பிரிவு நாமம் போடுவது எனும் சர்ச்சை வந்த போது, யாரோ? ஒருவர் எழுதிய புதுக்கவிதை ஞாபகம் வருகிறது.
"கோவில்யானைக்கு
மதம் பிடித்துவிட்டதாம்!
இல்லை;இல்லை
மதம் பிடிக்கவில்லை."
என இந்த மதம் எனும் சொல்லுடன் விளையாடியிருந்தார்.
ஆனால் விலங்கியற்படி;மதம் பிடியாமல் இருக்க அவற்றை இனப்பெருக்ககால உறவுக்கு அனுமதிக்க வேண்டும். இதுதான் மருந்து.
யோகன் பாரிஸ்
Post a Comment
<< Home