முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.
முத்து-தமிழினியுடன் மூன்று நாட்கள்.
_ _ _ _ _ சென்றவாரம் என் தொழில் தொடர்பான பயணமாக மூன்று நாட்கள் மங்களூரில் இருக்க வேண்டிய வாய்ப்பு வந்தது. பயணத்திட்டம் முடிவானவுடன் முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனடியாக பதில் வந்தது. அதிரடியாக யாரையா நீர் என்று கேட்டு. ஆனால் யாராயிருந்தாலும் சந்திக்கத் தயார் இது உறுதி என்று அவருடைய கைபேசி எண்ணுடன் அந்த மின்னஞ்சல் சொன்னது. ஒரு தன்னிலை விளக்கம் அனுப்பி அவரை கண்டுகொள்ள வைத்தபின் கைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினேன்.
_ _ _ _ _ இவருடைய எல்லா பதிவுகளையும் நான் படித்திருந்தாலும் எதற்கும் பின்னூட்டங்கள் இட்டதில்லை. அவருடைய பல கருத்துகளில் நான் மாறுபடுவதாலும் சில கருத்தாக்கங்களில் பலமாக மாறுபடுவதாலும் - எல்லா பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்துவிடுவேன். முதன்முதலில் அவர் என்னை சந்திக்க நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லா ஆண்களையும் சாய்க்கக் கூடிய அம்பொன்றை வீசினேன். அவர் இளமையாக இருப்பதாகக் கூறினேன். நல்லவேளையாக நான் தன்னெஞ்சறிந்து பொய்யற்கவில்லை. உண்மையில் அப்படித்தான் இருந்தார். அன்றிரவு (22-09-2006) ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டோம். மூன்று நாட்களும் இரவு உணவு ஒன்றாகவே சாப்பிட்டோம். மூன்றாம் நாள் மாலை என்னை மங்களூரின் ஒரு கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு தொடர்வண்டி நிலையம் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.
_ _ _ _ _ எங்கள் பேச்சு வார்த்தைகளில் நான் தொடர்ந்து மாற்றுக் கருத்துகளாக கூறியவுடன் அவர் ஒரு அம்பை வீசினார். திரு சோ அவர்களின் இன்னொரு குரல் என்று என்னைக் கூறினார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. இந்த விவரிப்பால் நான் கொஞ்சம் நொந்து போனேன். அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.
1. அறிவுப் பகலை உண்டாக்கித் தரும் ஆதவன் எங்கே,
இரவின் இருட்டில் எப்போதோ ஒளிரும் மின்மினி எங்கே?
2. அவருடைய(சோ) சில கருத்துகளில் முற்றிலும் நேர் எதிரான நிலைப்பாடுகள் கொண்டவனும், அவருடைய பல கருத்துகளில் முற்றிலும் உடன்படாதவனும், அவருடைய சில கருத்துக்களில் தனிப்பட்ட ஐயப்பாடுகளைக் கொண்டவனுமான எனக்கு இந்தப் பட்டம் நீதியாகப் படவில்லை.
3. நான் முத்துவிடம் சொன்ன கருத்துககள் அனைத்தும் என் சிந்தனையில் உதித்ததல்ல என்பதை அந்தப் பட்டம் மறைமுகமாகக் கூறுகிறது. என்னைப் பற்றிய என் சுய பெருமைக்கு இது பெரும் குந்தகமாக இருக்கிறது.
_ _ _ _ _ மிக நீண்ட தன்னிலை விளக்கமும், இது பற்றி என் உணர்வுகளை வெளிப்படையாக கூறவேண்டிய கட்டாயமும் எனக்கு ஏற்பட்டது. அவரும் இதைத் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். பயண முடிவில் நான் பெரியாரின் பல கூறுகளை ஆதரிப்பதாகக் கூறியது என் தன்னிலை விளக்கத்தின் வெற்றியைக் கூறியது. முத்து பேச்சுக்காக இப்படியெல்லாம் கூறமாட்டர் என்கிற என் நம்பிக்கை எனக்கு ஒரு மகிழ்வைத் தந்தது.
_ _ _ _ _ மூன்று நாட்களிலும் சோ, கருணாநிதி, திராவிடக் கருத்தாக்கங்கள், பெரியார், இராமதாசு, வலதுசாரி-இடத்சாரி கொள்கைகள் தொடர்பான விதயங்களை படு காரசாரமாகப் பேசிக் கொண்டோம். ஆனால் இருவரின் முகத்திலும் முறுவல் மாறவில்லை - கடைசி வரை.
_ _ _ _ _ ஜாதி, தலித்து, பிராமணீயம், காதல், சமுதாயம், தமிழ், தமிழர் தொடர்பான விதயங்களை சற்று ஏற்ற இறக்க இணக்கங்களுடன் பேசிக் கொண்டோம்.
_ _ _ _ _ வலைப் பதிவுகள், பதிவர்கள், தமிழ் வலையுலகின் ஈடு இணையற்ற துர்நட்சத்திரம் போலிடோண்டு ஆகிய விதயங்களை மையமாகப் பேசிக் கொண்டோம்.
_ _ _ _ _ இருவருக்கும் கருத்து வேறுபாடே வரமுடியாத எங்கள் குடும்ப விதயங்களை ஆர்வத்துடன் பரிமாறிக் கொண்டோம்.
_ _ _ _ _ ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்த எங்கள் இருவரின் ஒரு அலைவரிசையைப் பற்றிக் கொண்டு நாங்கள் நடத்திய இந்த நீண்ட சந்திப்பு என் நினைவுகளில் நீண்ட நாட்கள் நிற்கும்.
8 Comments:
ஆய்வுக்காக.
///அவர் என்னை சந்திக்க நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லா ஆண்களையும் சாய்க்கக் கூடிய அம்பொன்றை வீசினேன். அவர் இளமையாக இருப்பதாகக் கூறினேன். நல்லவேளையாக நான் தன்னெஞ்சறிந்து பொய்யற்கவில்லை. உண்மையில் அப்படித்தான் இருந்தார்.
////
Yes. He is Smart
///அவர் என்னை சந்திக்க நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவுடன் எல்லா ஆண்களையும் சாய்க்கக் கூடிய அம்பொன்றை வீசினேன். அவர் இளமையாக இருப்பதாகக் கூறினேன். நல்லவேளையாக நான் தன்னெஞ்சறிந்து பொய்யற்கவில்லை. உண்மையில் அப்படித்தான் இருந்தார்.
////
Yes. He is Smart
ஓகை
வயதை குறைத்துச் சொல்வது உங்கள் பார்முலாவாக்கும் என்னையும் அப்படித்தான் சொன்னீர்கள். வாழ்க உங்கள் செயல்பாடு
//. திரு சோ அவர்களின் இன்னொரு குரல் என்று என்னைக் கூறினார். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது//
லேசாக இறங்கிவிட்டது என்று கூட ஞாபகம். (அதாவது பேச்சின் வேகத்தை சொன்னேன் :))
// அறிவுப் பகலை உண்டாக்கித் தரும் ஆதவன் எங்கே,
இரவின் இருட்டில் எப்போதோ ஒளிரும் மின்மினி எங்கே?//
நான் சொன்ன கருத்து சரி என்பதற்கு ஆதாரமா மேற்கண்ட வரி?
// அவருடைய(சோ) சில கருத்துகளில் முற்றிலும் நேர் எதிரான நிலைப்பாடுகள் கொண்டவனும், அவருடைய பல கருத்துகளில் முற்றிலும் உடன்படாதவனும், அவருடைய சில கருத்துக்களில் தனிப்பட்ட ஐயப்பாடுகளைக் கொண்டவனுமான எனக்கு இந்தப் பட்டம் நீதியாகப் படவில்லை.//
சோவிற்கென்று சில கருத்துக்கள்(சிந்தனை முறை எனலாம்) இருக்கிறது.அதிலிருந்து நீங்கள் வேறுபடும் புள்ளிகளை வைத்து ஒரு பதிவிடுங்கள்.
// நான் முத்துவிடம் சொன்ன கருத்துககள் அனைத்தும் என் சிந்தனையில் உதித்ததல்ல என்பதை அந்தப் பட்டம் மறைமுகமாகக் கூறுகிறது. என்னைப் பற்றிய என் சுய பெருமைக்கு இது பெரும் குந்தகமாக இருக்கிறது.//
ஹிஹி Great people think alike எனலாமே...
//பயண முடிவில் நான் பெரியாரின் பல கூறுகளை ஆதரிப்பதாகக் கூறியது //
உங்கள் கருத்துக்களின் அடிப்படை அப்படி இருந்தாலும் வெளிப்பாடு சோவினுடையதை ஒத்ததாக இருக்கிறது என்று நினைக்கிறேன். மீதி கச்சேரியை சென்னையில் ஐனவரி தொடரலாம்...
//Yes. He is Smart//
வினையூக்கி,
உண்மை!
//உங்கள் கருத்துக்களின் அடிப்படை அப்படி இருந்தாலும் வெளிப்பாடு சோவினுடையதை ஒத்ததாக இருக்கிறது என்று நினைக்கிறேன்//
கருத்துகளின் அடிப்படை பெரியாருடையது ஆனால் வெளிப்பாடு சோவினுடையது.
வேடிக்கையாக இல்லை?
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்!
சென்னையில் தொடர்வோம்.
நன்றி முத்து.
தமிழ்பற்று..இது உதாரணம்..
சரியாக வருகிறதா?
சில விஸயங்களை பிடிக்கவில்லை என்றால் அதை நேர்மையாக பார்க்க வராது.இது சகஜும்தான்.
நேரில் பேசுவோம்.
Post a Comment
<< Home