Monday, December 18, 2006

கப்பிப்பயல்

(அறிவியல் சார்ந்த சரித்திரச் சிறுகதை)

கதிரவன் தன் தினக் கடமையைத் தொடங்கி கிழக்கை வெளுக்க வைத்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் தஞ்சை மாநகரின் மாளிகைகள் காலை வெயிலின் பொற்கிரணங்களால் ஜொலிக்கத்தொடங்கிவிடும். பெண்கள் சாணம் மெழுகிய தெருக்களில் கோலமிட தொடங்கிவிட்டார்கள். பரத கண்டத்தின் தென் பகுதியை ஒருகுடையின் கீழ் ஆண்ட மும்முடிச் சோழர் இராஜராஜரின் புகழ் உலகம் முழுவதும் பரவி கமழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அவர் தன் வாழ்நாளின் லட்சியமாக பெருவுடையார் கோவிலைக் கட்டிக்கொண்டிருந்தார். ஊரெங்கும் ஒரே பேச்சாக இல்லாமல் உலகமெங்கும் இதே பேச்சாக இருந்தது. முக்கால்வாசி முடிந்திருந்த கோபுரமே விண்ணளாவ நின்றதில் தஞ்சை மக்களே தரைக்கு மேல் ஒரு அடியில் தான் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்தக் கோவில் நிர்மானிப்பதில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நித்த விநோத பெருந்தச்சனுக்கு அந்த காலைப் பொழுது பிரகாசமாய் இல்லை. அவன் மகன் முருகபூபதியால் அவனுக்குத்தான் எவ்வளவு தொல்லை. பத்து வயது பையன்கள் ஒவ்வொரு வீட்டிலும் இவ்வளவு குரும்பா செய்வார்கள்? இவன் ஒரு படை வேறு சேர்த்துக்கொள்கிறான். கல்தச்சன் தெரு பசங்கள் என்றால் தஞ்சையே நடுங்குகிறது.

இளவெயிலும் தொடங்கிவிட்டது. அதிகாலை நகர்வலம் வரும் இராஜராஜர் பெருந்தச்சன் வீட்டு திண்ணையில் ஒரு அரை நாழிகை பெருவுடையார் கோவில் பணிகள் பற்றி விவாதித்துவிட்டு போவது வழக்கம். முக்கால் பகுதி முடிந்திருந்த கோபுர வேலைகளைத் தொடர்வதற்கு பெருந்தடையாக இருப்பது விமானத்தையும் அதைத் தாங்கும் பிரமேந்திரக் கல்லையும் மேலே ஏற்றுவதுதான். கோவில் பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் இதற்கு ஒரு வழி கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விவாதத்திலேயே பல நாட்கள் சென்று விட்டன. ஆனால் நேற்றும் இன்றும் இதைப்பற்றியே யோசிக்க முடியாமல் செய்துவிட்டான் பெருந்தச்சனின் மகன். இன்றைக்கு முருகபூபதி மீது பெருந்தச்சனின் பங்காளி வீரபத்திரனே நேரடியாக புகார் கொடுக்கப்போகிறான். 'எல்லாம் இவள் கொடுக்கிற இடம்தான். கண்டித்து ஒரு வார்த்தை சொல்லமாட்டாள். ஒரே மகன் என்றால் இப்படியா செல்லம் கொடுப்பாள். நானே கண்டிக்க வேண்டுமாம். முடிந்தால் செய்யமாட்டேனா?' என்று தாங்க மாட்டாமல் மனதுக்குள் மனைவியைக் கடிந்து புலம்பிக் கொண்டிருந்தான் பெருந்தச்சன். 'அந்த காளி கோவில் விவகாரத்திலேயே முருகபூபதி பற்றி இராஜராஜருக்குத் தெரியும். இப்போது மேலும் கோபமடையப் போகிறார். முருக பூபதியை சிறைப்பள்ளியில் சேர்க்கப் போகிறார்கள்.'

சென்ற மாதத்தில் ஒரு நாள் கல்தச்சன் தெரு காளி கோவிலில் இரவில் மூல விக்கிரகத்தின் முகத்தில் சிவப்பு ஒளி வீசியது. பூசாரி பயந்து போய் ஏதோ தெய்வ குற்றமென்று சொல்லி பலி பூஜைக்கும் யாகத்திற்கும் ஏற்பாடு செய்யப்போக இராஜராஜரே நேரில் வந்து பார்த்து அந்த ஒளி மேலே ஒரு விளக்கிலிருந்து வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முருகபூபதிதான் ஒரு உடைந்த சிவப்புக் கண்ணாடி சில்லை அவ்விளக்கில் பொருத்தி காளியின் செம்முகத்தை அழகு பார்த்திருக்கிறான். பிறகு அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டான். அதைப் பார்த்து பூசாரி கலவரமடைந்து களேபாரம் செய்துவிட்டான். நல்ல வேளையாக பெருந்தச்சனுக்கு தண்டனையோ அபராதமோ இல்லாமல் எச்சரிக்கையோடு விட்டுவிட்டார் இராஜராஜர். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிராரோ என்ற கவலையில் பெருந்தச்சன் உழன்று கொண்டிருந்தான். அதோ முன்புரவி காவல் வீரர்கள் ஆடி அசைந்து வந்து கொண்டிருகிறார்கள்! பின்னால் ஒரு கருஞ்சிவப்பு அரபுக்குதிரையில் ஆரோகனித்து வந்து கொண்டிருக்கிறார் இராஜராஜர்.

வேறுபுறமிருந்து பவ்வியமாக வந்த வீரபத்திரன் பெருந்தச்சனுக்கு வணக்கம் சொன்னான். கொடுக்கப்போவது அவன் மகன் மீது புகார் என்றாலும் பணிவில் குறைவைக்கவில்லை. பெருந்தச்சனும் தலையை ஆட்டிவைத்தான். இராஜராஜர் திண்ணையில் அமர்ந்ததுமே பெருங்கற்களை மேலே ஏற்றுவதைப் பற்றித்தான் விசாரித்தார்.

"என்ன பெருந்தச்சரே, ஏதாவது வழி தோன்றியதா?"

"ஐயனே, வழி கிடைக்காமல் போகாது. ஆனால் இன்னும் ஏதும் கிடைக்கவில்லை".

"அது யார் வீரபத்திரரா? இவர் உனது பங்காளி அல்லவா, உங்கள் கோவில் திருப்பணி எந்த அளவில் இருக்கிறது வீரபத்திரரே, குடமுழுக்குக்கு நாள் குறித்துவிடலாமா?"

"அப்படியே செய்யலாம் ஐயனே. எல்லா பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. அப்புறம் ஐயனே, எனக்கொரு புகார் இருக்கிறது. சிரமம் பாராது இப்பவே விசாரிக்க வேணும்".

"யார் மீது புகார் வீரபத்திரரே?"

"பெருந்தச்சனின் அருமை மகன் முருகபூபதி மேல் தான் ஐயனே. காளி கோயிலில் அவன் செய்ததுதான் உங்களுக்குத் தெரியுமே".

"அப்போது மன்னித்து விட்டுவிட்டேனே! இப்போது என்ன செய்தான்?"

"கல்தச்சன் தெருவிலிருக்கும் அத்தனை கிணற்றுக் கப்பிகளையும் எடுத்து வந்துவிட்டான். என் மனையாளோ நேராக குடந்தைவிட்டு கிணற்றில் தண்ணீர் மோந்ததில் குடத்தை நசுங்கிவிட்டாள். என் தாயார் அவளைப் போட்டு வறுத்தெடுக்கிறாள். எல்லாவற்றுக்கும் இந்த சிறுவனும் அவன் கூட்டாளிகளும் தான் காரணம். அதில் என் மகனும் உண்டு ஐயனே!"

"தச்சரே, மகனைக் கண்டிக்க மாட்டீரா?"

"ஒரே மகன். அதான் அவன் தாய் ரொம்ப செல்லம் கொடுத்துவிட்டாள்."

"நீர் கண்டிக்க வேண்டியதுதானே!"

"ஐயனே, நீங்கள்தான் அவனைக் கேட்க வேண்டும்."

"அவன் பாடசாலை ஆசிரியர்களிடம் சொல்லிவிடுங்கள்."

"பயனில்லை ஐயனே! அவன் பாடசாலையில் பரம சாது. படிப்பில் படு சுட்டி. எல்லா ஆசிரியர்களும் அவன் பக்கம்."

"விநோதமான பிள்ளையைத்தான் பெற்றுவைத்திருக்கிறீர். நித்த விநோத பட்டத்தை அவனுக்குத்தான் தரவேண்டும். சரி அவனை கூப்பிடுங்கள். நான் விசாரிக்கிறேன்." தந்தை அழைத்ததும் தயங்கித் தயங்கி அங்கு வந்தான் முருக பூபதி. இராஜராஜர் விசாரித்தார்.

"உன் தந்தையின் நற்பெயரைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே! இந்தப் புகாருக்கு என்ன சொல்கிறாய்?"

"............."

"பேசாமல் நிற்கிறாயே...... முருகபூபதி அழகான பெயர். அந்த முருகன் செய்த குறும்பெல்லாம் எல்லாரையும் மகிழ்வித்தன. நீ ஏன் எல்லோருக்கும் தொல்லை கொடுக்கிறாய்? பயப்படாமல் பதில் சொல்."

"கல்யாணத்துக்கு முன் வள்ளியைக் கேட்டிருந்தால் முருகனைப் பற்றி அப்படி சொல்லியிருக்கமாட்டள் ஐயனே! எங்கள் குலதெய்வம் திருவேரகத்து (சுவாமிமலை) சாமிநாதன். அதனால் தான் முருகன் என்று என் பெற்றோர் பெயரிட்டனர்."

"அப்படியானால் அந்தப் பெயரிலா கோளாறு?"

"நீங்கள் வேண்டுமானால் தச்சேந்திரன் என்று அழைக்கலாம் ஐயனே!"

"ஏன் அந்தப் பெயர்."

"என் தந்தையை நீங்கள் தச்சராஜன் என்று அழைப்பதுண்டு அல்லவா?"

"ஆஹா! இராஜராஜனின் மகன் இராஜேந்திரன் என்றால் தச்சராஜனின் மகன் தச்சேந்திரன்! பயலே, நான் உன்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறேன். அரட்டை அல்ல. உனக்கு எதற்கு அத்தனை கப்பிகள்?"

"பிரம்மேந்திரக் கல்லையும் விமானக் கல்லையும் மேலே தூக்க ஒரு வழி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன், ஐயனே!"

"தம்பி, பிரமேந்திரக் கல் ஒவ்வொன்றையும் அசைப்பதற்கே ஐம்பது பேர் வேண்டும். தெரியுமில்லையா உனக்கு. விமானக் கல் பகுதிகளும் ஒவ்வொன்றும் அதைப்போலத்தான். அது தெரியுமா உனக்கு. கப்பிகளெல்லாம் சிறு கற்களுக்குத்தான். நீ சிறு பையனாய் லட்சணமாய் கிட்டிப் புள்ளோ சடுகுடுவோ விளையாடு. அல்லது மல்யுத்தம் கற்றுக் கொள். உன் உடம்புக்குத் தோதாக இருக்கும்."

"ஐயனே அரண்மனைக் கிணற்றுக் கப்பிகளைப் போல் பெரிய கப்பிகள் ஒரு ஐம்பது வேண்டும். நான் இவர்களை தொந்தரவு செய்யமாட்டேன்."

"அத்துடன் பெரிய வடங்களும் உனக்குத் தேவைப் படுமே! செயல்தலைவரே, இந்தப் பையனுக்கு ஐம்பது பெருங்கப்பிகளும் வேண்டுமளவுக்கு வடங்களும் கொடுங்கள். வார்ப்பு சாலைக்கு அவனை அழைத்து செல்லுங்கள். அவனே தேர்தெடுக்கட்டும். அதன் விலையை பெருந்தச்சனின் ஊதியத்தில் பிடித்தம் செய்து விடுங்கள்."

"ஐயனே!" என்று அலறினான் பெருந்தச்சன்.

"சரி, பெருந்தச்சன் நமக்கு நெருங்கியவர். அதனால் பாதிவிலையில் கொடுங்கள். தச்சரே, நேரமாகிவிட்டது முற்பகலில் பெருவுடையார் ஆலயத்தில் சந்திப்போம்." என்று சொல்லி அந்த திண்ணைக் கூட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் இராஜராஜர். அவர்கள் சென்றபின் தன் பிள்ளையிடம் கேட்டான் பெருந்தச்சன்,

"முருகா, என்னாடா என் மூன்று மாத ஊதியத்திற்கே உலை வைத்துவிட்டாய்? செயல்தலைவரிடம் கப்பிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மல்யுத்த பயிற்சியில் சேர்ந்துவிடு."

"அப்பா, காளி கோயில் தேரை இந்த கிணற்றுக் கப்பிகளின் உதவியால் நான் ஒருவனாகவே அசைத்துப் பார்த்தேன். அதை அசைக்கப் பத்துப்பேராவது வேண்டுமல்லவா? என்னிடம் ஒரு வழி இருக்கிறது. முயற்சிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். ஊதியம் பறிபோகாது. வெகுமதி விரைந்தோடிவரும்".

"ஏண்டா நீ பாட்டுக்கு ஏதேதோ செய்கிறாய். தலையாரி யாரும் கேட்பதில்லையா?"

"உங்களிடம் சொல்லி அரசரிடம் சொல்லிவிடுவேன் என்றால் எந்த தலையாரி என்னைக் கேட்பான்? அப்பா உங்களுக்கு இதெல்லாம் புரியாதப்பா?"

"அடேய்" என்று கத்திய தந்தை சொல்லைக் கேட்க ஆளில்லாமல் துள்ளி ஓடி வெளியேறினான் முருகபூபதி. இரண்டு நட்களுக்கு அவனைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.


* * * * * *

பெருவுடையாரின் ஆலயத்தை கல்லுளிகளின் சப்த ஜாலம் நிறைத்திருந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இளங்காலை வெயிலும் கருணைக்காட்டாமல் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. கிழக்குச் சுற்றுச் சுவரின் ஓரத்தில் ஒரு வெண்துகில் பந்தலுக்கடியில் ஒரு இராஜமாது வீற்றிருந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளுடையும் முகப்பிரகாசமும் அந்த பகுதியையே ஒளிமயமாக்கிக் கொண்டிருந்தது. பணிப்பெண்கள் பின்புறமும் வேலையாட்கள் முன்னே பணிந்தும் அவள் கட்டளைகளைக் கேட்கத் தயாராக இருந்தார்கள். அவர்தான் சோழ நாட்டு மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் மாதரசி, இராஜராஜனின் அருமைத் தமக்கை குந்தவை நாச்சியார். கண்டவர் எவரும் அனிச்சையாய் கையெடுத்து கும்பிட்டுவிடும் அறிவுக்களை சொட்டும் முகவிலாசம் பொருந்திய குந்தவை நாச்சியாரிடம் சற்று பதட்டத்துடன் வந்து நின்றார் ஒரு பகுதியின் தலைமை தச்சர்.

"மாண்புமிகு பேரரசி, என்னை மன்னிக்கவேண்டும். ஒரு தவறு நடந்திருக்கிறது".

"கந்தமூர்த்தித் தச்சரே என்ன கலக்கம் உங்களுக்கு?"

"முன்மண்டப தெற்கு வாயிலின் முகப்புத் தூண்களுக்கான ஒரு பெரிய கல் காணவில்லை. அதிலிருந்து நான்கு தூண்கள் செய்யத் திட்டமிட்டிருந்தேன். நேற்று அதில் குறியீடெல்லாம் செதுக்கி வைத்துவிட்டுத்தான் போனேன். இன்று காலையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இரவுக் காவலுக்கு இருந்தவன் ஏதும் சொல்லாமல் காலையில் வீடு சென்றுவிட்டான். அவனுக்குத்தான் ஆள் அனுப்பியிருக்கிறேன்".

"என்ன சொல்கிறீர்கள் கந்தமூர்த்தி, கொடும்பாளூரிலிருந்து இரண்டு யானைகள் இழுத்து வந்த அத்தனை பெரிய கல்லுக்கு எந்த கள்வன் தஞ்சைக் கோயிலுக்குள் வரப் போகிறான்?"

"பேரரசி, அக்கல்லை அசைக்கவே இருபது வேலையாட்கள் வேண்டும். ஆனால் மாயமாய் மறைந்துவிட்டது".

"எங்கே, இராக்காவலில் இருந்த யாருமே இப்போது இல்லையா?"

"அனைவரும் மாலையில்தான் வருவார்கள். வளர்பிறை முழு ஒளியில் பாட்டும் கூத்துமாகத் தான் நேற்றும் இராக்காவலர்கள் இருந்திருக்க வேண்டும். அரை நாழிகையில் உங்களிடம் மீண்டும் வந்து தகவல் சொல்கிறேன். குஞ்சர மல்லரிடமும் சொல்லியிருக்கிறேன். பெருந்தச்சர் இன்னும் ஆலயத்திற்கு வரவில்லை".

கந்தமூர்த்தி சென்று விட்ட சற்று நேரத்தில் அங்கு வந்தார் இராஜராஜர். கூடவே பட்டொளி வீசும் புத்தம் புதுமலராக ஒரு கரும் புரவியிலிருந்து குதித்து இறங்கினாள் இராஜராஜனின் அருமைப்புதல்வி சின்ன குந்தவை. பதினாறு பிராயத்திலிருந்த கட்டிளங்குமரி அங்கு வந்து அப்பகுதியை ஒரு மாயாலோகமாக் மாற்றிவிட்டாள். ஓடிச் சென்று தன் அத்தை குந்தவை நாச்சியாரிடம் அடைக்கலமானாள். இராஜராஜரும் அந்தப் பந்தலிலேயே இன்னொரு இருக்கையில் அமர்ந்தார். கந்தமூர்த்தி தச்சன் மீண்டும் வந்து கல் இன்னும் கிடைக்கவில்லை என்று சேதி சொன்னான். இராஜராஜன் அவனைக் கேட்டார்,

"தச்சரே, இராக்கவலரை அனைத்துவர ஆளனுப்பினீர் அல்லவா, யார் வந்தாலும் என்னிடம் உடனே அழைத்து வாருங்கள்". என்று கூறிய போது அங்கு வந்தான் பெருந்தச்சன்.

"ஐயனே, தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். என் அருமை மகன் இரவு வீட்டுக்கே வரவில்லை. அதான் தேடிக்கொண்டிருந்தேன், சற்று தாமதமாகிவிட்டது".

"கந்தமூர்த்தி தச்சரே, சற்று நில்லும். நீங்கள் தேடும் கல் இருக்குமிடம் எனக்குத் தெரிந்துவிட்டது. பெருந்தச்சரே மகன் வந்துவிட்டானா, இல்லையா? காலையில் உங்கள் இல்லத்துக்கு வந்த போதுகூட இது பற்றி சொல்லவே இல்லையே!"

"இல்லை ஐயனே, இன்னும் வரவில்லை. நேற்று தட்டாங்குடி கோயிலில் கூத்துப் பார்க்க போகிறேன், நள்ளிரவு அல்லது வெள்ளென வருவேன் என்று சொல்லிவிட்டு போனான். அவனும் வரவில்லை. அவன் கூட்டாளிகளும் வரவில்லை. அதான் ஊர் பூராவும் தேடிக்களைத்து இங்கு வந்தேன்".

"பெருவுடையார் கோவிலில் தேடினார்களா?"

"இல்லை ஐயனே".

"கந்தமூர்த்தி தச்சரே, அந்த பெருங்கல்லை தரையில் தேடி பயனில்லை. ஆகாசத்தில் தேடுங்கள். உடனே கிடைக்கும். பெருந்தச்சரே கோவிலை ஒரு வலம் வாருங்கள். உங்கள் மகனுடன் வருவீர்கள்". பெருந்தச்சன் உடனே வெளியேறினான். கந்தமூர்த்தி கேட்டான்,

"ஐயனே ஆகாசமென்றால்...."

"அட, சற்று அண்ணாந்துதான் பாருங்கள் தச்சரே, அதோ பாருங்கள் கோபுரத்தின் பின்புறத்தில் ஒரு கயறு தொங்குவதை. அதன் மறு நுனியில் பாருங்கள்".

"ஆம் ஐயனே கல்லை நகர்த்தி இழுத்துச் சென்ற தடம் மேற்கு நோக்கி சென்றிருக்கிறதை நான் கண்டேன். இதோ போகிறேன்".

குந்தவை நாச்சியார் தம்பியிடம் கேட்டார்,

"தம்பி நீ சொன்னாயே அந்த பையனா செய்திருக்கிறான்".

"அவன் , அவன் தெருவில் உள்ள காளி கோயில் தேரை கிணற்றுக் கப்பிகளால் சற்று நகர்த்தியதை காவலர்கள் ஊர்க்காவல் தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்போதிருந்தே கண்காணிக்கச் சொன்னேன். நேற்றைய தகவல் மட்டும் இன்னும் எனக்கு வரவில்லை".

"தம்பி இந்த தச்சேந்திரன் இராஜேந்திரனுக்கும் ஒரு பெரிய கோவிலைக் கட்டித்தருவான் பாரேன்". என்று சொன்ன குந்தவை நாச்சியாரிடம் சின்ன குந்தவை சொன்னாள்,

"அத்தை அந்த பையனை உடனே பார்க்கவேண்டும். அரண்மனைக்குக் கூட்டிப்போகவேண்டும்."

"பொறு குந்தவை, பெருந்தச்சன் அவனைக் கண்டுபிடித்து அழைத்து வரட்டும். உன்னப்பன் அவனை விசாரிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்".

* * * * * *

கந்தமூர்த்தி கோபுரத்தின் மேற்கில் நின்று அண்ணாந்து பார்த்தான். உச்சியில் கழிகளும் கயிறுகளும் பலகை சாரங்களுமாய் இருந்தது. 200 அடி உயரத்தில் சிறியதாய் ஒரு கல் தொங்கலிடப்பட்டு கோபுரப் பக்கத்தினுடன் அணைத்துக் கட்டப்பட்டிருந்தது. ஆகா! அதே கல்தான்! எத்தனை சிறிதாக தெரிகிறது! எப்படி மேலே போயிற்று? ஆட்களை மேலே ஏறச் சொல்லி உறுதிப் படுத்தச் சொன்னான். அவர்கள் சொன்ன செய்தி அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. ஏராளமான் கப்பிகள் கோத்து வாங்கப்பட்டு கயிற்று வடங்களின் பின்னலில் குழப்பக் காடாக இந்தக்கல்லும் பிணைக்கப்பட்டிருந்தது. அதை அவிழ்ப்பதற்குக் கூட இதைப் பின்னியவன்தான் வரவேண்டும். இதைக் கேட்டதும் கந்தமூர்த்தி தச்சன் ஓட்டமும் நடையுமாக அரசரிடம் விரைந்தான்.

கோவிலின் வடபுற மண்டபமொன்றில் படுத்து தூங்கிய மூன்று சிறுவர்களையும் தன் மகனையும் அசைத்து எழுப்பிய பெருந்தச்சன் தன் மகனிடம் கேட்டான்.

" கூத்துக்குப் போகிறேன் என்று சொல்லி இங்கே ஏன் வந்தீர்கள். அங்கே உங்கள் ஆயிகள் காளி ஆட்டம் ஆடுகிறார்கள், பெற்றவர்கள் உயிரை ஏனடா இப்படி எடுக்கிறீர்கள்?"

"அப்பா முன் மண்டபத்தின் தெற்கில் இருந்த ஒரு பெரிய கல்லை பல கப்பிகளை இணைத்து நாங்களே கோபுரத்தின் மேலே ஏற்றிவிட்டோம். இராக் காவலர்கள் எல்லோரும் உதவினார்கள். மேற்கே போய் பாருங்களேன்", என்றான் படு ஆர்வத்துடன். பெருந்தச்சனுக்கு கண்கள் சிவந்தன.

"அடேய், என்ன காரியம் செய்தாய். எத்தனை பேர் உயிருக்கு உலை வைக்கப்பார்த்தாய்? கோபுரத்தில் கல் விழுந்து சேதமானால் அபசகுனமடா படுபாவி". கோபத்தின் குன்றேறி நின்றான் பெருந்தச்சன். மீண்டும் அவனே பொறுமினான்,

"வா வா, அரசரிடம் சொல்லி உடனே சிறைப்பள்ளிக்கு உன்னை அனுப்பிவிடுகிறேன். நீங்களும் வாங்கடா." என்று சொல்லி அவன் புஜத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு இராஜராஜன் இருக்கும் பந்தலுக்கு வந்தான். அங்கு முன்பே கந்தமூர்த்தி வந்து விவரத்தைச் சொல்லியிருந்தான்.

"பெருந்தச்சரே அவனை விடுங்கள்", கர்ஜித்தார் இராஜராஜர்.

சின்ன குந்தவையின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்து போயிருந்தன. முருகபூபதியை கண்களால் அளந்தாள். நான்கடி உயரம். சற்றே பருத்த தேகம். சுருட்டைத் தலையில் ஒரு பின் கொண்டை. குருவிக்கூட்டைப் போல் தொங்கியது. உடல் முழுதும் கேசத்திலும் மண்ணும் புழுதியும். அவனுடைய இளங்கருப்பு மேனியில் அங்கங்கே காயங்கள் அடைக்கலமாயிருந்தன. இடையில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்தான். உயரம் குறைந்த அந்த பழுப்பு நிறத் துண்டை இடுப்பில் கட்டி இருகாலுக்கும் இடையில் இட்டு பின்புறம் சொருகியிருந்தான். வலதுகால் பெருவிரலில் நகம் பெயர்ந்து இரத்தம் உறைந்திருந்தது. தூங்கி எழுந்து வந்த நிலையிலும் அவன் கண்கள் துறுதுறுவென அலைந்து கொண்டிருந்தது. அலைந்த கண்களில் சின்ன குந்தவை பட்டபோது அவள் முறுவலித்தாள். முருக பூபதிக்கு சூழலின் கணத்தை அந்த முறுவல் நீக்கியது. சற்று தயங்கிய முருகபூபதி தன் மண்டை மண்டையான வெண்பற்கள் தெரிய பளீரென சிரித்தான்.

இராஜராஜர் பொய்யான கடுங்குரலில் கூறத் தொடங்கினார்.

"முருக பூபதி, நீ செய்தது உனக்கு சரியெனப்படுகிறதா? உனக்கு கப்பிகள் கொடுத்தது எவ்வளவு தவறு, ஏகப்பட்ட நாசத்தை விளைவித்திருப்பாய் போலிருக்கிறதே. நல்லவேளையாக பெருவுடையான் அருளால் ஒன்றும் அசம்பாவிதம் நிகழவில்லை. உன்னை சிறைக்கு அனுப்புவதாக முடிவு செய்திருக்கிறேன்".

"ஐயனே, என் பாக்கியம். அங்கேயும் எனக்கு நான் வேண்டியதைத் தந்து அருளவேண்டும்".

"வழக்கம்போல் உன் தந்தையின் ஊதியத்தில் பிடித்தம் செய்யவேண்டும்", என்றார் இராஜராஜர்.

"ஐயனே!" என்று அலறிய பெருந்தச்சன் "இவனை பாதாளச் சிறைக்கே அனுப்பிவிடுங்கள்" என்று கூவினான்.

"தம்பி முருக பூபதி, இதை எப்படி சாதித்தாய்?" என அன்பொழுக வினவினார் குந்தவை நாச்சியார்.

"அம்மையே, பீமனுக்கு சாதாரணமாகவே பத்து ஆள் பலம். அதாவது ஒரு ஆளுக்குள் பத்து ஆட்கள் ஒளிந்து கொண்டிருப்பதைப் போல. ஆளுக்குள் ஆட்கள். அது போல கப்பிக்குள் கப்பிகள் என்று யோசித்தேன். பரிசோதிதேன். "

"அபசகுனமாய் ஏதாவது நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?"

"அம்மையே, ஆறு வடங்கள் அந்தக் கல்லை தரைக்குமேல் தூக்கிவிட்ட பிறகு மேலும் ஆறு வடங்களை சேர்த்துவிட்டேன். அத்தனை இராக் காவலர்களியும் உயிர்காத்து ஓடும் வழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னேன். மேலே வடங்களை எந்த முளையிலும் கட்டாமல் கோபுரம் முழுவதையும் சுற்றிக் கட்டிவிட்டேன். ஆறு வடங்கள் போதுமான எடைக்கு பன்னிரெண்டு வடங்களால் படிமுடிச்சு போட்டார்கள் இராக்காவலர்கள். கல், கயிறு அறுந்தோ அல்லது முடிச்சு அவிழ்ந்தோ விழ வாய்ப்பில்லை. கல்லின் எடை சாய்க்க வேண்டுமானால் கோபுரத்தையே சாய்க்கவேண்டும். அது இந்த யுகத்தில் நிகழப் போவதில்லை. அப்புறம் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கவே இருக்கிறான் என்னப்பன் திருவேரகத்து சாமிநாதன். அம்மையே நான் ஏதும் தவறு செய்திருக்கிறேனா?"

"இராஜராஜா, குஞ்சர மல்லரே, பெருந்தச்சரே, என்ன சொல்கிறீர்கள்? பையனுக்கு பாதாள சிறையா அல்லது பதக்கமும் பட்டமுமா?" என்று கேட்டார் குந்தவை நாச்சியார்.

"பட்டம் கொடுத்துவிடலாம்", கத்தினாள் சின்ன குந்தவை, " அப்பா, அவன் 'கப்பிப்பயல்!'"

* * * * * * * * * * * * * * * * *

பி.கு:
1. கப்பி (pully) - கிணறுகளில் உபயோகப் படுவது நிலைக்கப்பி. பளு தூக்கிகளில் பயன்படுவது இயங்கு கப்பி . இக்கதையில் இயங்கு கப்பியின் பயன்பாடு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டதைப் போல் எழுதியிருக்கிறேன்.

2. இத்தனை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆறே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பெரிய கோவிலைப் பற்றிய எல்லா ஆச்சரியங்களையும் விட இது பெரிய ஆச்சரியம்.

3. பெரிய கோவிலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன. நாம் அறிந்த மூவரின் சுட்டிகள்.

தேசிகன்
பவித்ரா ஸ்ரீனிவாசன்
லலிதாராம்

48 Comments:

At December 18, 2006 1:23 PM, Blogger நாமக்கல் சிபி said...

கொஞ்சம் பெருசா இருக்கு... சீக்கிரம் வரேன்...

எங்க தலைவர் பேரை வேற போட்டுட்டீங்க.. தூக்கிடுவோம் :-)

 
At December 18, 2006 1:48 PM, Blogger ஓகை said...

ராத்திரி மூனு மணிக்கி என்ன பண்ணிட்டுருங்கீங்க? இந்தியாவிலேர்ந்து இந்த நேரத்துல பின்னூட்டம் வரும்னு நெனைக்கவே இல்ல.

படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.

உருகுவேல நிம்மதி இருக்குறவரு பேர கதைக்கு வச்சுட்டேன்.கத கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா உங்க தலைவர அமைதி காக்க சொல்லுங்க. அடிக்க வரவேண்டாம்.

 
At December 18, 2006 1:51 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஓகை, முழுவதையும் படித்தேன். வித்தியாசமான சிந்தனைதாம். சில எனது புரிதலையும் மீறி இருக்கிறது.

சமீபத்தில் நமது வலைப்பதிவர் ஒருவர் பி.பி.சி. நிறுவனத்திற்காக பண்டைய தென்னிந்திய கோயில்கள் பற்றி எடுத்திருந்த ஒரு நிகழ்படத்தை வலையேற்றி இருந்தார். அதனைத் தேடிக் கொண்டிருக்கிறேன், கிட்டவில்லை.

அதில் மரங்களை சக்கரம் போல் செய்து அதன் மேல் கற்களை ஏற்றி யானைகளால் தள்ளப் பட்டதாகவும். அவ்வாறு தள்ளுவதற்கு ஏதாக ஒரு பெரிய மேடினைக் கட்டியதாகவும், அம்மேட்டின் தடங்கள் இன்னும் இருப்பதாகவும் கூறி இருந்தார்கள்.

நீங்கள் சொல்வதற்கும் அந்த நிகழ்படத்தில் சொல்லப்பட்டதற்கும் வேறுபாடுகள் இருக்கிறதே.

நம் நண்பர்கள் யாரேனும் அந்த வலைப்பதிவை ஞாபகத்தில் வைத்திருந்தால் சுட்டி தருமாறு வேண்டுகிறேன்.

 
At December 18, 2006 1:53 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

வெட்டி இப்போ இருக்கறது பாஸ்டனில் அதான் ஆபிஸ் நேரத்தில் இப்படி பிஸியா இருக்கார், இந்த வார நட்சத்திரம்!!

அது இருக்கட்டும் நீங்க என்ன பண்ணறீங்க ராத்திரி மூணரை மணிக்கு? :)

 
At December 18, 2006 2:11 PM, Blogger ஓகை said...

இகொ, இந்த பதிவைப் போடும்போது ப்லாக்கர் கொஞ்ச்ம் சொதப்பி நேரமாகி வந்த தூக்கம் போய் விட்டது. அடுத்த சுற்று தூக்கமும் வந்து விட்டது. இனி படுக்கைதான்.

சாரப்பள்ளம் என்ற ஊரிலிருந்து சாய்தளத்தில் ஏற்றியதாக சொல்வதை சரித்திர வல்லுனர்கள் மறுக்கிறார்கள். பவித்ராவின் சுட்டியைப் பாருங்கள். விமானம் ஒரே கல்லால் ஆனது அல்ல என்பதை பலரும் சொல்லிவிட்டார்கள். லலிதாராம் உச்சிக்கு சென்று அங்கேயே எடுத்த படங்களைப் பாருங்கள்.

நீங்கள் சொல்லும் பிபிசி படத்தப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்.
இங்கு யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்டுப் பார்க்கிறேன்.

இது பற்றி அதிகம் அறிந்தவர்களும் நேரடியாக ஆய்வுகளில் ஈடுபடுபவர்களும் பொன்னியின் செல்வன் மடற்குழுவிலும் வரலாறு.காம் இதழ் குழுவிலும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் ஒத்த கருத்திலேயே இருக்கிறார்கள்.

 
At December 18, 2006 2:15 PM, Blogger நாமக்கல் சிபி said...

ஓகை,
கொத்ஸ் சொல்ற மாதிரி நானும் அந்த வீடியோ க்ளிப்பிங்ஸை பார்த்தேன்.

நீங்க சொல்றது வித்யாசமா இருக்கு...

//இலவசக்கொத்தனார் said...

வெட்டி இப்போ இருக்கறது பாஸ்டனில் அதான் ஆபிஸ் நேரத்தில் இப்படி பிஸியா இருக்கார்,//

:-))

 
At December 18, 2006 9:21 PM, Anonymous Anonymous said...

நல்ல கற்பனை ஓகை அவர்களே. நானும் நீங்கள் குறிப்பிட்ட பல புத்தகங்களை, பதிவுகளை படித்தவரையில் அது ஒருகல் அல்ல...இது பற்றி திரு.பால குமாரன் எழுதிய கதை (உடையார்) மிக அழகானது. படித்துப்பாருங்கள்.

மெளலி.

 
At December 18, 2006 10:00 PM, Blogger ஓகை said...

வெட்டி, பல செய்திகளைப் படித்த போது பொதுவாக நம்பப்படுவதற்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்களுக்குள்ளேயே வேறுபடுகிறார்கள். இவற்றில் நான் நம்பும் கருத்துகளை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருக்கிறேன். நான் கொடுத்திருக்கும் சுட்டிகளை கட்டாயம் படித்துப் பாருங்கள்.

 
At December 18, 2006 10:02 PM, Blogger ஓகை said...

மௌலி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முரண்படுகின்ற பல கருத்துகளில் நான் நம்பும் கருத்துகளை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருக்கிறேன்.

 
At December 18, 2006 10:36 PM, Anonymous Anonymous said...

ஓகை! நன்றாக வந்திருக்கிறது.
உரையாடல்களும் , சூழல் விவரித்த விதமும் நன்று. மீண்டும் ஒரு முறை நிதானமாக இரவு படிக்கிறேன். பின்பு நிதானமாய் விவாதிக்கிறேன். "மற்றபடி அது ஒரு கல் அல்ல என்பது தான் எனக்கெட்டிய வரலாறு வரை."

வென்றிட வாழ்த்துகள்.

அப்புறம், இதையும் படியுங்களேன் . இது நானிட்ட அதே களம் சார்ந்த பதிவு என்பதால் படிக்க வேண்டுகிறேன்.

http://thamili.blogspot.com/2006/11/blog-post_116411927480702366.html

நன்றி.

 
At December 19, 2006 1:03 AM, Blogger Technology Buff, Entrepreneur said...

good one... you have a talent for using appropriate tamil words!!! and a talent for spinning a story. Narrative is wonderful too...

Keep it up, would like to see more from you!

 
At December 19, 2006 4:09 AM, Anonymous Anonymous said...

விடியோ கிளிப்பிங் தேசிகன் தளத்தில் பார்த்ததாக ஞாபகம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறார் கூகிளாண்டவர்.

இந்தக் கற்பனை மிக நன்றாகவே இருந்தது. வரலாற்றுக் கதைகள் எழுதும்போது உண்மையானவற்றை மட்டுமல்ல உண்மையாக இருக்குமோ என்று எண்ண வைக்கும் கருத்துக்களும்தாம் தேவை.

மிக நல்ல நடை, குறும்பை திறம்பட வெளிப்பட வைத்திருக்கிறீர்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஓகை!

 
At December 19, 2006 5:18 AM, Anonymous Anonymous said...

Very good. Hearty Congrats and best wishes. sps

 
At December 19, 2006 6:30 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

ஓகை,

நான் குறிப்பிட்ட படம் இருக்கும் பதிவு இதோ. இதனைத் தேடித் தந்த பெனாத்தலாருக்கு என் நன்றிகள்.

 
At December 19, 2006 6:36 AM, Blogger கப்பி | Kappi said...

அருமையான நடையில் நல்ல புனைவு ஓகை சார்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

சுட்டிகளுக்கு நன்றி!


//உருகுவேல நிம்மதி இருக்குறவரு பேர கதைக்கு வச்சுட்டேன்//

:)

 
At December 19, 2006 6:26 PM, Blogger ஓகை said...

தமிழி, வி வி தேவன்,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

 
At December 19, 2006 6:30 PM, Blogger ஓகை said...

ராசுகுட்டி,

இகொ அந்த விடியோ இருக்கும் திரு அவர்களின் சுட்டியைக் கொடுத்துவிட்டார். நீங்களும் பாருங்கள். அங்கு கமல் அவர்கள் அளித்த மிக விரிவான பதில்களையும் அவர் கொடுத்துள்ள சுட்டிகளையும் பாருங்கள்.

பாராட்டுக்கு நன்றி.

 
At December 19, 2006 6:34 PM, Blogger ஓகை said...

Dear SPS,

Thanks for reading and compliments.

I value your comments in Gold.

Yours
Natarajan.

 
At December 19, 2006 6:55 PM, Blogger ஓகை said...

கப்பி, பாராட்டுக்கு நன்றி.

உங்க பெயர்க் காரணமும் நான் கதையில் சொன்னதும் ஒன்றா?

சின்ன வயசில் கப்பிகளோடு விளையாடுனீர்களா?

 
At December 19, 2006 7:45 PM, Blogger ஓகை said...

இகொ,

நன்றி. அந்த சுட்டியில் கமல் அவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களையும், சுட்டிகளையும், என் பதிவில் நான் கொடுத்திருக்கும் சுட்டிகளையும் பார்த்தால் என் அனுமானம் சரியாக இருப்பதற்கு இடமிருப்பது புரியும்.

நான்கு மைல் நீளமும், 200 அடி உயரமும், யானைகள் செல்லத்தக்க அளவு அகலமும் கொண்ட ஒரு சாய்தளப் பாதை என்பது ஒரு மிகப்பெரிய கட்டுமானம்.

மேலே பத்து அடி அகலமான 200 அடி உயரமான மண் குவியல் தரை மட்டத்தில் 410 அடி அகலம் இருந்திருக்க வேண்டும்.
யானைகளும் பெருங்கற்களும் செல்லத்தக்க அளவில் கெட்டிக்கப் பட்டிருக்க வேண்டும். இதற்கு சாத்தியக் கூறு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லிவிடலாம்.

இந்த காலத்திலேயே கான்கிரீட் கொண்டு அப்படி ஒரு பாதை அமைப்பது எவ்வளவு பெரிய செயல் என்பதை திரு வடுவூர் குமார் அவர்களால் சொல்ல முடியும்.

கிபி 1000 ஆவது ஆண்டு வாக்கில் உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாகவோ அல்லது இதுவே மிக உயரமானதாகவோ இருந்திருக்க வேண்டிய நிலையில், இது ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப் பட்டிருப்பது ஏராளமான நூதன தொழில் நுட்பங்களின் பயன்பாட்டைச் சொல்லுகிறது.

December 20, 2006 8:22 AM

 
At December 19, 2006 10:33 PM, Blogger தருமி said...

ப்ரமேந்திரக் கல் என்பதுதான் அந்த பெரிய கல்லா?

400-500 ஆண்டுகளுக்கு முன் கட்டிய எங்க ஊரு மீனாட்சியம்மன் கோவிலிலேலே தூண்களில் கீறல் விழுவதாக சேதி வரும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட இந்தக் கோவிலை டிசைன் செய்த அந்த தச்சன் எப்படி செய்திருப்பார்?

இம்மாம் பெரிய கல்லை எப்படி ஏற்றினார்கள்?
-என்பது போன்ற கேள்விகளே மனச விட்டு இறங்கமாட்டேங்குது. இதுல இந்தக் கோவிலைக்கட்ட ஆறே ஆறு ஆண்டுகள்தான் ஆச்சுங்கிறது இன்னும் ப்ரமிப்பை உயர்த்துது - அந்தக் கோவில் உசரத்துக்கு..

உங்கள் அறிவியலோடு கலந்த இந்தப் புனைவுக் கதைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

 
At December 19, 2006 10:36 PM, Blogger தருமி said...

எல்லா 'விக்கிப் பசங்களும்' ஒன்றாக வந்து தீர்க்காத எம் சந்தேகத்தை தனியொருவராக வந்து தீர்த்தமைக்கு என் அன்பளிப்பான ஆயிரம் பொற்காசுகளை எம் கணக்கரிடமிருந்து (அவரைத் தேடிக் கண்டுபிடித்து) வாங்கிக்கொள்ளுமாறு ஆணையிடுகிறோம்.. :)

 
At December 20, 2006 5:33 AM, Blogger ஓகை said...

இக்கதை பற்றி மின்னஞ்சலில் வந்த ஒரு நண்பரின் மடல்:

நல்ல கதை. சில இடங்களில்
கொஞ்சம் எடிட் செய்தால்
இன்றும் நன்றாக இருக்கும்.
என் கருத்துக்கள் சில:

1. முதல் பாராவிலேயே "ஆனால்
அந்தக் கோவில்
நிர்மானிப்பதில் தலைமைப் பொறுப்பில்
இருக்கும் நித்த விநோத
பெருந்தச்சனுக்கு அந்த காலைப்
பொழுது பிரகாசமாய் இல்லை"
என்பதை கொண்டு வந்தால் நன்றாக
இருக்கும்.

2. முதலில் சரித்திர
கதைக்கான ஸ்டைல் இருக்கிறது ஆனால்
போக போக சில இடங்களில்
தற்கால தமிழ் என்று
மாறிவிடுகிறது.

3. பெருந்தச்சனின் மகனின்
செயல் ஒன்றை சொல்லிவிட்டு
பிறகு அவன் இப்படி பட்டவன்.
ரொம்ப செல்லம் .. எல்லாம்
சொல்லாம்.

4. படிக்கும் போது கொஞ்சம்
பெரிசாக இருப்பது போல்
இருக்கிறது எனக்கு. நிறைய
படியுங்கள் நிறைய எழுதுங்கள்
தானாகவே உங்களுக்கு தானாகவே
வரும்.

நண்பரே, அக்கறையின் பாற்பட்ட உங்கள் விமர்சனத்துக்கு மிக நன்றி.

 
At December 20, 2006 5:37 AM, Blogger ஓகை said...

//அன்பளிப்பான ஆயிரம் பொற்காசுகளை எம் கணக்கரிடமிருந்து (அவரைத் தேடிக் கண்டுபிடித்து) வாங்கிக்கொள்ளுமாறு ஆணையிடுகிறோம்.. :)//

ஆயிரம் பொற்காசுக்காக ஆளாய்ப் பறந்த அந்த தருமி எங்கே,
ஆயிரம் பொற்காசுகளை அநாயாசமாக அள்ளி வீசும் இந்த தருமி எங்கே!

தருமிகளின் தமிழ்நாடு ரொம்பவே வளர்ந்திருக்கிறது, ஒரு டுபாக்கூர் கணக்கர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு!

 
At December 22, 2006 10:34 PM, Anonymous Anonymous said...

நடராஜன்,

கதை நன்றாக இருக்கிறது. பெரிதாக இருந்தாலும் போரடிக்கவில்லை.

ஒரு சிறு தகவல். நித்தவினோதப் பெருந்தச்சரோ குஞ்சரமல்லரோ கோயில் நிர்மாணத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் அல்லர். சிற்பிகளுள் சிலராகத்தான் கல்வெட்டுகள் அடையாளம் காட்டுகின்றன. ஆனால் இது கதை என்பதால் நீங்கள் இவ்வாறு குறிப்பிடுவதில் தவறில்லை.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி
கமல்
www.varalaaru.com

பி.கு : லலிதாராம் ஒரு முக்கிய அலுவல் காரணமாக தற்போது பெங்களூரில் இல்லை. இணையப்பக்கம் வர இன்னும் 2-3 வாரங்களாகும். வந்தவுடன் உங்கள் பதிவைப் படிப்பார்.

 
At December 23, 2006 10:07 AM, Blogger ஓகை said...

கமல், தங்கள் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக நன்றி.

கூடியவரை நமது வரலாறு தளத்தில் சரி பார்த்தபின்னரே கதையை எழுதினேன்.

இந்த கலைக்கோவன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். நான் எழுதியதற்கு அதுவே அடிப்படை:

" 'தட்சிணமேரு' என்றும், 'தேவாலயங்களின் சக்ரவர்த்தி' என்றும் பொருத்தமுறப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பெருமைக்குரிய திருக்கோயிலைக் கண்டு வியக்காதவரும் காணவிரும்பாதவரும் இந்தக் காசினியில் இல்லை. இதை எழுப்பிய நித்தவினோதர்தான் எத்தனை பேராற்றலாளர்!"

நன்றி, கமல்.

 
At December 23, 2006 8:57 PM, Anonymous Anonymous said...

தவறு எப்படி நேர்ந்தது என்று புரிந்து விட்டது. பெரியகோயிலை எழுப்பியவர் நித்தவினோதர்தான். ஆனால் கலைக்கோவன் குறிப்பிட்டது மாமன்னர் இராஜராஜரை. நித்தவினோதர் என்பது இராஜராஜரின் விருதுப் பெயர்களில் ஒன்று. குடிமக்கள் மன்னரின் விருதுப்பெயர்களைத் தங்கள் பெயருடன் ஒட்ட வைத்துக் கொள்வது அந்நாளில் வழக்கமாக இருந்தது. அப்படி வந்ததுதான் நித்தவினோதப் பெருந்தச்சர் என்ற பெயரும்.

நன்றி
கமல்
www.varalaaru.com

 
At December 25, 2006 9:33 AM, Blogger குமரன் (Kumaran) said...

கொஞ்சம் தாமதமாக வந்து இந்த சரித்திரக்கதையைப் படித்தேன். தாமதத்திற்கு மன்னியுங்கள் ஓகை ஐயா.

மிக நன்றாக உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது கதை.

பாலகுமாரனின் உடையார் நாவலின் நான்கு பாகங்களையும் அண்மையில் தான் படித்து முடித்தேன். வரலாறு.காம் கட்டுரைகளை அண்மைக்காலமாகத் தொடர்ந்து படித்து வருகிறேன். இராசராசேசுரத்தைப் பற்றிய வியப்புகள் மிக நீண்ட பட்டியலாகத் தான் இருக்கின்றன.

 
At December 26, 2006 11:33 AM, Blogger ஓகை said...

கமல், தகவலுக்கு நன்றி. இனிமேல் மேலும் கவனமாக இருக்கிறேன்.

 
At December 26, 2006 11:34 AM, Blogger ஓகை said...

குமரன், பாராட்டியதற்கு நன்றி.

 
At December 26, 2006 7:57 PM, Blogger சாத்வீகன் said...

நானும் தாமதமே

அருமையான கதை.. சாரப்பள்ளம் பற்றிய கதைகள் சரிந்து விழ
சரித்திர சான்றுகளை ஒப்பு நோக்கி எழுதியுள்ளீர்கள்.

நன்று. நன்றி.

 
At December 26, 2006 8:40 PM, Blogger VSK said...

மிக அருமையான நடையில் வந்திருக்கும் கதை!

இது பற்றிச் சொல்லப்பட்டுவரும் இன்னொரு கர்ண பரம்பரைக் கதையையும் இங்கு இடுவதில் தவறில்லை என நினைக்கிறேன்!

"இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரம்மேந்திரக் கல்லை ஏற்றிவிடவேண்டும்! இது அரச கட்டளை!" என அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தான் பெருந்தச்சன்.

வேறு வழியில்லை. இனி தப்பி உயிர் பிழைத்தால் போதும் என முடிவு செய்து, மாறுவேடமிட்டு தஞ்சைப் பெருநகரை விட்டு நீங்கி, கால் போன போக்கில் செல்லலானான்.

ஒரு சத்திரத்தில் இரவு தங்க முடிவு செய்து படுக்கையை விரித்தான்.
தனக்குள்ளே புலம்பலானான்.

"என் பெருமைக்கு இது ஒரு பெரும் இழுக்கல்லவா? எப்படி அந்தக் கல்லை மேலே ஏற்றுவது?"

"எந்தக் கல்லை ஏற்ற வேண்டும்?" பக்கத்தில் படுத்திருந்த ஒருவனின் குரல் கேட்டது!

தன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பெருந்தச்சன், "அதில்லை. மன்னர் தஞ்சைப் பெரிய கோயில் கட்டுகிறார். அதன் உச்சியில் ஒரே கல்லிலான பிரம்மேந்திரக் கல்லை ஏற்றணுமாம். எப்படி என அனைவரும் விழிக்கிறார்கள். அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன்" எனப் புளுகினான்!

"ப்பூ! இதென்ன பிரமாதம்! கல்லின் எடையைக் கணக்கிட்டு, அதற்குத் தகுந்த தூரத்தில் இருந்து ஒரு சாய்வுக்கட்டு போட்டு, சாரம் ஏற்றி, யானைகளால் தள்ளச் செய்து ஏற்றிவிடலாமே! இதென்ன பிரமாதம்! ஆனால், இதைவிட ஒரு பெரிய பணிக்கு விடை தெரியாமல் அவரவர் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?" என அவன் சொன்னான்!

மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெருந்தச்சன், "அதென்ன இன்னொரு பணி? இதை விடப் பெரியது?" என வினவினான்.

"திருவாரூரில் மன்னர், தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய சுற்றளவில், இதுவரை இல்லாத அளவில், ஒரு திருக்குளம் அமைக்க முடிவு செய்திருக்கிறார். குளம் வெட்டுவது பெரிதல்ல. ஆனால், அதனை எப்படி நீரால் நிரப்புவது? இதுதான் கட்டுமானப் பணியாளரின் பெருங்கவலை!" எனச் சொன்னான்.

பெருந்தச்சன் உடனே சற்றும் தாமதமின்றி, "இது ஒன்றும் கடினமல்லவே! நான்கு மூலைகளிலும் வற்றாத காவிரியின் உப காலவாய்களை இணைத்து அவற்றின் மூலம் தடையின்றி நீர் வரச் செய்யலாமே" என்கிறான்.

பெருந்தச்சனைப் போலவே மாறுவேடத்தில் தப்பியோடி வந்திருந்த கமலாலயத் தச்சனும், மகிழ்வுடன், தலை தப்பியதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லி தன் வழியே செல்ல, பெருந்தச்சனும் களிப்புடன், சாரம் கட்டச் சென்றான்.

இதுவே தஞ்சைப் பெரிய கோயிலும், திருவாரூர் கமலாலயமும் பிறந்த வரலாறு என ஒரு பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் திருவாரூரில் சொன்னார்!!

இது கதையாகக் கூட இருக்கலாம்.

ஆனாலும், ரசிக்கத்தக்கதாகவே எனக்கு பட்டது!

உங்களுடன் இதைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

 
At December 27, 2006 10:08 PM, Blogger ஓகை said...

சாத்வீகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சாரப்பள்ள்ளம் சார்ந்த யூகம் தவறென்று பலசரித்திர ஆசிரியர்களும் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் இக்கருத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.

 
At December 27, 2006 10:12 PM, Blogger ஓகை said...

வாங்க எஸ்கே. தஞ்சை கோயிலைப் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளுக்கு பஞ்சமே இல்லை. நந்தி வளர்கிறது, நிழல் விழாது என்பது போல பலவுண்டு. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதைப் போல நடந்தாலும் நடந்திருக்கலாம்.

நன்றி.

 
At December 28, 2006 2:08 AM, Blogger G.Ragavan said...

ஓகை, சரித்திரக் கதை படித்து எத்தனை நாட்களாயிற்று. மிகவும் ரசித்தேன். அதிலும் அந்தத் தலைப்பு. மிகக் குறும்பு.

வசனங்களும் குறுகுறுப்புத்தான். தச்சராஜன் மகன் தச்சேந்திரன் என்று இராராஜனிடம் சொல்லும் துணிவு. :-)
முருகன் அருளால் எல்லாம் நல்லபடி முடிந்த இனிமை. ஆகா.

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

 
At December 28, 2006 7:11 PM, Blogger மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

 
At December 28, 2006 8:00 PM, Blogger ஓகை said...

ஜிரா, உங்கள் மனம்நிறைந்த பாராட்டுக்கு மிக நன்றி.

மு.கார்த்திகேயன், வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி.

 
At January 02, 2007 5:26 PM, Blogger ENNAR said...

ஓகை
முதலில் தங்களுக்குஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
தங்களது வரலாற்று கற்பனை கதை நன்றாக உள்ளது இப்படி கற்பனை செய்து தான் நற்பயனை பெற்றோம். அந்த காலங்களில் பெரும்பாலும் மரக்கட்டையிலான தண்ணீர் இறைக்கும் கப்பிகல் தான் இருந்தது. தாங்கள் குறிப்பிட்டது செயின் பிளாக் அல்லது புள்ளி பிளாக் என்றதன் மூலம் உயரமான இடங்களுக்கு கனமான பொருள்களை இன்று ஏற்றுவது. வாசலில் சாணம் மெழுகியதாக கூறினீர்கள் மெழுகமாட்டார்கள் தெளிப்பார்கள்.
பிரமேந்திர கல்லை மன்னன் ஏற்றமுடியாமல் தவிக்கும் பொழுது அங்கே போகர் சித்தர் சீடர் கருவூரார் டெலிபதி மூலமாக அந்த கோவிலில் இருந்து சாரப்பள்ளம் என்ற ஊர்வரை மண்போட்டு அந்த கல்லை ஏற்றியதாகவும் மண் எடுத்து பள்ளமானதால் அந்த ஊருப்குப் பெயர்இன்றும் சாரப்பள்ளம் என்று உள்ளதாக கேள்வி.
http://palani.org/bhogar-biography.htm
This was done through his disciple Karuvoorar and another Tamil disciple who acted as intermediaries and through messages tied to the legs of courier birds, like today’s homing pigeons. At Bhogar’s suggestion a gradient ramp five miles long was built, up which the stone was pulled to the top of the temple.
ஆனால் கலைக்கோவன் அவர்கள் அந்த கல் பலதுண்டுகளாக செய்து கொண்டு சென்று இணைத்ததாகக் கூறுகிறார் . எது எப்படியோ இப்படி ஒரு சிந்தனையை துண்டிய தங்களுக்கு வாழ்த்தை நான் தெரிவித்து இது போல் பல வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதுங்கள் எங்களுக்கம் அதிலிருந்து சில எண்ணங்கள் பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 
At January 03, 2007 1:40 AM, Blogger ஓகை said...

வாங்க என்னார். என் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!. உங்கள் பாராட்டுகளுக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி.

1. அக்காலங்களில் கிணற்றுக் கப்பிகள் மரத்தில்தான் இருக்கும் என்றாலும் அந்நாட்களில் தஞ்சை உலோக வார்ப்படங்களுக்கு பெயர் பெற்றிருந்தது. செம்பு மற்றும் வெங்கலச் சிலைகள் மிகப் பிரசித்தம். அதனால் அரன்மனை கிணற்றுக் கப்பிகள் உலோகத்தில் இருந்திருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு pully system கொண்ட்தான் மேலே ஏற்றியிருக்கிறார்கள் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர் ஒருவரின் கருத்து.
2. சான்ம் தெளிப்பார்கள் என்பது உண்மைதான். மண் தரையில் அவ்வாறு தினம் தெளிக்கப்பட்ட தரை மெழுகியது போலவே இருக்கும். அதனால் அப்படி எழுதிவிட்டேன்.
3. போகர் சித்தர் சுட்டியைப் படித்துவிட்டு கருத்துக் கூறுகிறேன். அதை வைத்தும் ஒரு கதை எழுதிவிடலாம்.

 
At January 03, 2007 2:09 AM, Blogger ENNAR said...

எழுதுங்கள் எழுதுங்கள் அதிகம் எழுதுங்கள்

 
At January 03, 2007 3:13 AM, Blogger கார்த்திக் பிரபு said...

நல்லா இருக்கு கப்பி

 
At January 03, 2007 6:40 AM, Blogger thiru said...

நண்பர் ஓகை,

அருமையான வரலாற்றுக் கதை. உங்கள் கதை சொல்லும் விதமும் அருமை.

அண்ணாந்து பார்க்கையில் வியக்க வைக்கும் இராஜகோபுரத்தின் கம்பீர கலசத்தை சுற்றியும், சிற்பங்கள் பற்றியும் பல ஆயிரம் கதைகள்.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

 
At January 10, 2007 9:17 PM, Anonymous Anonymous said...

நடராஜன்,

கற்பனை நல்லா இருக்கு. ஒரே ஒரு விஷயம், 216 அடி உயரத்திற்கு ஓங்கி நிற்கும் கட்டிடம் 'விமானம்'. நுழை வாயிலையே கோபுரம் என்று குறித்தல் சரி.

வாழ்த்துக்கள்.

லலிதாராம்.

 
At March 08, 2007 10:04 AM, Blogger Maraboor J Chandrasekaran said...

very nice narrative. One more jewel from Natarajan, inspite of history being different, very good imagination.

 
At September 28, 2008 9:11 PM, Blogger இளங்குமரன் said...

அருமையான கதை. இந்தக் கதையின் மூலமும் இந்தக் கதைக்கு இட்டுள்ள பின்னூட்டங்களின் மூலமும் பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். இன்று புழக்கத்தில் இருக்கும் பல தொழில் நுட்பங்கள் இல்லாத காலகட்டத்தில் இத்தனை பெரிய உயரமான கோவிலை அமைத்த தொழில்நுட்பம் உண்மையில் வியக்கத் தக்கதே. எனக்குத் தெரிந்த ஒரு தகவலை இங்கு சொல்ல ஆசைப்படுகின்றேன். கோவிலைக் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது நீர் ஊறிப் பெருக்கெடுத்ததாகவும் அதை நிறுத்த முடியாமல் தவித்ததாகவும் சிற்பியின் மகனே அதனைத் தீர்தததாகவும் ஒரு தகவல் உண்டு. சிற்பியின் மகன் தன் தந்தையிடம் குரவை மீன்களைப் பல கூடைகள் கேட்டதாகவும் அஸ்திவாரம் போடத் தோண்டிய குழிக்குள் குரவை மீன்களைக் கொட்டியதாகவும் அந்த மீன்கள் ஊற்றுக்கண்களுக்குள் சென்று நுழைந்ததால் ஊற்று அடைபட்டு நீர் வருவது குறைந்ததாகவும் அதன்பின்னர் அஸ்திவாரம் போட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். (குரவை மீன்கள் சிறு துளைகளுக்குள் ஓடி ஒளியும் தன்மையுடையவை)வாழ்த்துகள். நன்றி.

 
At October 03, 2008 3:27 AM, Blogger ஓகை said...

இளங்குமரன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
குரவை மீன்கள் தகவல் ரொம்பவும் சுவராஸ்யமாக இருக்கிறது. நன்றி.

 
At November 20, 2008 12:49 AM, Blogger துளசி கோபால் said...

ஆஹா..... அருமை.

நம்ம தருமியின் பதிவு வழியா இங்கே வந்தேன்.

உமக்குப் பாராட்டுகளும் தருமிக்கு என் நன்றியும்.

யாரங்கே.....

அந்தப் பரிசுப்பொருட்களைக் கொண்டுவந்து இவர் முன் வை.

oops..... சரித்திரக்கதை படிச்சவுடன் அப்படியே அரண்மனை ஸ்டைல் வந்துருச்சு:-)

 
At November 20, 2008 8:54 AM, Blogger ஓகை said...

வாங்க துளசி அக்கா!

மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு மிக நன்றி. உங்களை சற்று நேரம் அந்தகால தஞ்சைக்கு அழைத்து சென்றதே நீங்கள் எனக்குத் தந்த மிகப் பெரிய பரிசு.

 

Post a Comment

<< Home