Sunday, December 16, 2007

ந.ஒ.க:-போடி வெளியே...

போடி வெளியே...

- இனிமே உனக்கு இங்க இடமில்ல. கிளம்பு.

இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போன அவள் சொன்னாள்,

- என்னாச்சு இன்னிக்கி உங்களுக்கு. வேற மாதிரி பேசுறீங்க.
- நான் சொல்றது புரியுதா இல்லியா? நீ இன்னிக்கி கிளம்பனும் நல்லா புரிஞ்சுதா?
- நான் போக மாட்டேன். நான் ஏன் போகனும்?
- மேற்கொண்டு பேசறதுக்கு எதும் இல்ல. நீ இடத்த காலி பண்ணு.
- நான் இங்கேயே இருந்துகிறேன். எனக்கு போக விருப்பமில்லை.
- இவ்வளவு சொல்றேன் உனக்கு எட்டலியே.. போ வெளியே..

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை இத்தனை நாளாக வளர்த்தவர் திடீரென வெளியே போ என்று சொல்வது அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் போராட முடிவு செய்தாள்.

- நான் போக முடியாது. நீங்கள் இப்படி மாறுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
- இதோ பார். சும்மா சண்டித்தனம் பண்ணாத. சொல்றதக் கேளு. போ வெளியே..
- கண்டிப்பா முடியாது. நான் எங்க போவேன்? எனக்கு யாரத் தெரியும்? உங்கள விட்டா வெளியுலகமே தெரியாத என்னை வெளிய போச் சொல்றதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வருது? உங்க மனசு அவ்வளவு கல்லா?
- திரும்பத் திரும்ப முரண்டு பிடிச்சியானா நான் உன்னை வலுக்கட்டாயமா வெளியேத்த வேண்டியிருக்கும். ஒழுங்கா போயிடு.
- முதல் முறயா நீங்க சொல்றத கேக்காம இருக்கறதுக்கு மன்னிக்கனும். என்னால போக முடியாது. நான் இங்கிருந்து போக மாட்டேன்.
- கழுத்த புடிச்சு தள்ளினாத்தான் நீ போவியா?

அவளைத் தள்ளிய தள்ளலில் அவள் நிலை குலைந்து தலை குப்பற ஆன அந்த நிலையிலும் அவள் சொன்னாள்,

- வேண்டாம். என்னை வலுக்கட்டாயமாத் தள்ளாதிங்க. நான் போகலை.
- இனிமே நீ செத்த அப்பறம்தான் நான் உன் மூஞ்சியிலே முழிப்பேன். போடி வெளியே....

ஒரு நெக்கு நெக்கித் தள்ளியதில் அவள் வெளியே விழுந்து அலறினாள்.

இது வரையில் நமக்குப் புரியாத ஒரு மொழியில் கடவுளுடன் நடந்த உரையாடலை எனக்குப் புரிந்தவரையில் மொழிபெயர்த்திருந்தேன். இன்மேல் என் மொழிபெயர்ப்பு தேவையில்லை. அவள் நம் மொழியிலேயே குவா என பேச ஆரம்பித்துவிட்டாள்.

நடராஜன்
17-12-2007

14 Comments:

At December 16, 2007 12:07 PM, Blogger நந்து f/o நிலா said...

அருமை அருமை

 
At December 16, 2007 12:43 PM, Blogger ஓகை said...

நந்து, நன்றி நன்ரி.

 
At December 16, 2007 3:39 PM, Blogger துளசி கோபால் said...

அடக்'கடவுளே'....

நான் இப்படித்தான் பிறந்தேனா?

நல்லா இருக்கு. அருமை.

 
At December 16, 2007 4:13 PM, Blogger Boston Bala said...

::))

 
At December 16, 2007 6:04 PM, Blogger ஓகை said...

அரைபிளேடு, துளசி அக்கா, பாஸ்டன் பாலா,
நன்றி.

 
At December 17, 2007 11:47 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

முன்னமே இந்த மெத்தடில் ஒரு கதை எழுதி இருக்கீங்களே. அப்போ கூட நான் வந்து அது மாதிரி தேசிகனும் எழுதி இருக்காருன்னு சுட்டி தந்தேனே....

 
At December 17, 2007 6:17 PM, Blogger ஓகை said...

இகொ, நிங்கள் இதைச் சொல்வீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது விடுதலை என்ற தலைப்பில் சூக்கும வழி என்ற கதை. அதில் மகிழ்ச்சியுடன் வெளியேறுவதையும் இதில் வெளியேறாமல் போராடுவதையும் எடுத்துக் கொண்டேன்.
கதை நச்ச் தானே?

 
At December 17, 2007 7:35 PM, Blogger SurveySan said...

தூள்!

 
At December 18, 2007 5:36 AM, Blogger மங்களூர் சிவா said...

போடி வெளியே என தலைப்பு வைத்துவிட்டு கடவுள் சொன்னதாக சொல்ல முனைந்ததால் பதிவில் எங்கும் 'டி' உபயோகப்படுத்தவில்லை என நினைக்கிறேன் அதனால கதை அழுத்தமா இல்லை!!

ஆனா சொல்ல வந்த மேட்டர் சூப்பர்.

 
At December 18, 2007 9:46 AM, Blogger ஓகை said...

மங்களூர் சிவா, வருகைக்கு நன்றி.

//- இனிமே நீ செத்த அப்பறம்தான் நான் உன் மூஞ்சியிலே முழிப்பேன். போடி வெளியே....//

கடைசியாக, முத்தாய்ப்பாக கடவுள் "டி" போட்டுப் பேசினாரே, கவனிக்கவில்லையா?

 
At December 18, 2007 8:00 PM, Blogger ஓகை said...

சர்வேசன்,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக நன்றி.

 
At December 29, 2007 9:57 PM, Blogger Nithi said...

நல்லா இருக்கு

 
At December 30, 2007 10:48 PM, Blogger ஓகை said...

நித்யா,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக நன்றி.

 
At December 30, 2007 10:48 PM, Blogger ஓகை said...

நித்யா,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக நன்றி.

 

Post a Comment

<< Home