Saturday, February 17, 2007

மூவருக்கு தூக்கு.

தூக்கு தண்டனையை ஆதரித்து எழுதும் துர்பாக்கிய நிலை வந்துகொண்டே இருக்கிறது.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தூக்குதண்டனை நீதி நிலைநாட்டப்பட்டதற்கான நல்லதொரு அறிகுறி. அநீதி ஏற்றுக் கொள்ளப்படுவதற்கில்லை என்ற அரசின் நிலைப்பாடு பொதுமக்களுக்குத் தரும் பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணை இல்லை.

தனிமனித விரோதத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காக தனிமனிதருக்கு இழைக்கப்படும் கொடூர செயல்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை. இங்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் தூக்கு தண்டனை வேண்டாம் என்று பரிந்துரை கூட செய்யலாம். ஆனால் பொது வாழ்வின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.

அப்சலுக்கும் அப்படியே அதிமுகவுக்கும் அப்படியே.

9 Comments:

At February 17, 2007 11:57 AM, Blogger BadNewsIndia said...

---பொது வாழ்வின் நிம்மதியின்மைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.---

மிக மிகச் சரி!

அப்படியே, சமூக முன்னேற்றத்துக்கு பங்கம் விளைவிக்கும், லஞ்சம் போன்ற குற்றத்திர்க்கும் தண்டனை துரிதமாக கிடைக்க வகை செய்தால் மேலும் சிறப்பு.

 
At February 17, 2007 11:30 PM, Blogger Unknown said...

ஆனால் பொது வாழ்வின் நிம்மதியின்மைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.//

Ogai ayya,

I second this whole heartedly

 
At February 18, 2007 4:20 AM, Blogger ENNAR said...

ஓகை
இந்த தண்டனையை நான் வரவேற்கிறேன் கல்லூரிமாணவர்கள் என்ன தவறு செய்தார்கள் செயலலிதாவிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட கொலை செய்யலாமா? பலரை கொல்ல முயன்று மூவர். இந்தியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும் அப்பொழுதுதான் தவறுகள் நடைபெறாமல் இருக்கும்

 
At February 18, 2007 4:41 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
உயிரின் மதிப்பை அந்த உதவாக்கரை ஆதரவாளர்களுக்கு உணர்த்தவேண்டும். இத் தண்டனை உடன் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது என் அவா!
அந்தப் பிஞ்சுகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும். அம்மாவுக்கோ;ஐயாவுக்கோ இனி அவன் அவன், தன்னுயிரைத் தேவையெனில் கொடுக்கட்டும்.
இப்படி மதிகெட்ட அபிமானி இருப்பதிலும் சாவதே மேல்!
அந்த நீதிபதிகளைப் பாராட்டவேண்டும்.

 
At February 18, 2007 6:03 PM, Blogger ஓகை said...

கருத்து தெரிவித்த BNI, செல்வன், என்னார், யோகன் அனைவருக்கும் நன்றி.

 
At February 26, 2007 1:21 AM, Blogger GB said...

I too feel the same. Usually, reading about death sentence induces unhappiness in me. Feel that they can be given a second chance....But this bit of news didn't...and i felt more happy when I read that their other sentences are to run consecutively....if rules are as tough as in arab countries then we wouldn't be in this state....

 
At February 26, 2007 1:21 AM, Blogger GB said...

I too feel the same. Usually, reading about death sentence induces unhappiness in me. Feel that they can be given a second chance....But this bit of news didn't...and i felt more happy when I read that their other sentences are to run consecutively....if rules are as tough as in arab countries then we wouldn't be in this state....

 
At February 26, 2007 7:18 AM, Blogger Geetha Sambasivam said...

நீங்கள் குறிப்பிட்ட பதிவைப்படித்தேன். அப்புறம் வந்து இந்தப் பதிவுகளையும் படித்தேன். மிக்க நன்றி, உங்கள் கருத்துக்களுக்கு.

 
At February 27, 2007 10:30 AM, Blogger enRenRum-anbudan.BALA said...

ஓகை,
தெளிவாகத் தான் கூறியிருக்கிறீகள் !

//பொது வாழ்வின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த குற்றத்துக்கும் உயர்ந்தபட்ச தண்டனையே வழங்கப் பட வேண்டும்.

//

எ.அ.பாலா

 

Post a Comment

<< Home